அடிதூள்…! இந்த 232 செயலிகளை தடை செய்ய மத்திய அரசு அதிரடி முடிவு…! முழு விவரம் இதோ….

சீன இணைப்புகளுடன் கூடிய 138 ஆன்லைன் சூதாட்ட செயலி, 94 லோன் செயலியை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் பேரில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 138 பந்தய பயன்பாடுகள் மற்றும் 94 கடன் வழங்கும் சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொருள்” இருப்பதால், இந்த செயலிகள் ஐடி சட்டத்தின் பிரிவு 69 கீழ் நடவடிக்கை எடுக்க தொடங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால், நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பார்வையாளர்களை குறிவைத்து சூதாட்ட விளம்பரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Vignesh

Next Post

இட்லி தோசைக்கு பதிலாக அட்டகாசமான பான் கேக் இப்படி செஞ்சு பாருங்க.!

Mon Feb 6 , 2023
தேவையான பொருட்கள் : வாழைப்பழம் – 1, சர்க்கரை – 2  டீ ஸ்பூன், எண்ணெய் – 2 tsp, வெண்ணிலா எசென்ஸ் -1 ட்ஸ்ப், கோதுமை மாவு  -1 cup, பேக்கிங் பவுடர் – 1 டீ ஸ்பூன், பேக்கிங்  சோடா – 1/4 tsp, உப்பு – 1 சிட்டிகை, பால் – 3/4 கப்  செய்முறை: ஒரு பாத்திரத்தில் வாழைப்பழங்களை நன்றாக மசித்து கொள்ளவும். அதன்பின் […]

You May Like