அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால் கிறிஸ் கெயிலுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்.. காரணம் இதுதான்..

அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி

அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல்

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 வேளாண் துறை மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும் விவசாயத் துறை தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது விவசாயிகளிடமிருந்து கடுமையான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. இந்த நிலையில் நேற்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சலசலப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனால் கோபடைந்த எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என அமளியில் ஈடுபட்டனர். எம்.பிக்களின் கூச்சல் குழப்பம் காரணமாக அவை பரபரப்பாக காணப்பட்டது. ஒரு கட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று வேளாண் மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார். இந்த அமளியில் சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது.

வேளாண்

இந்த நிலையில் இன்று காலை, அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, இந்த முடிவை அறிவிக்கும் போது, எம்.பி.க்கள் “குறிப்பாக நாற்காலி மற்றும் மொத்த ஒழுங்கற்ற நடத்தை ஆகியவற்றால் கட்டுக்கடங்காத நடத்தையை காட்டினர் என்று கூறினார். நேற்று நடந்ததைப் பற்றி நான் வேதனையடைகிறேன், இது தர்க்கத்தை மீறுகிறது. இது மாநிலங்களவைக்கு ஒரு மோசமான நாள்” என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் ஜனநாயக இந்தியாவின் முடக்குதல் இன்னும் தொடர்கிறது.. ஆரம்பத்தில் மௌனம் சாதிப்பதன் மூலமும், பின்னர் பாராளுமன்றத்தில் எம்.பிக்களை இடைநீக்கம் செய்வதன் மூலமும், விவசாயச் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலையை கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாகத் சட்டங்களை இயற்றுவதன் மூலமும்… தொடர்கிறது.

எல்லாம் அறிந்த இந்த அரசாங்கத்தின் முடிவற்ற ஆணவம் முழு நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

நடிகை சரண்யாவின் முதல் கணவர் இந்த பிரபல நடிகராம்..! அப்போ பொன்வண்ணன்..?

Mon Sep 21 , 2020
நடிகை சரண்யா தமிழ் திரையுலகில் உலக நாயகனுக்கு ஜோடியாக நாயகன் என்னும் திரைப்படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். சில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் பட்டையை கிளப்பி வந்தார். இவரின் திருமண வாழ்க்கையை பொறுத்தவரை நடிகர் பொன்வண்ணன் அவர்களை திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சரண்யாவிற்கு 1987 ஆம் ஆண்டு […]
cvwxbuyd

You May Like