பெரும் சோகம்..!! உலகின் No.1 மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம் சாலை விபத்தில் பலி..!!

உலகின் நெ.1 மாரத்தான் வீரரான கெல்வின் கிப்டம், கார் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உலக மாரத்தான் சாதனையாளரான கெல்வின் கிப்டம் தனது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹக்கிசிமானா உடன், நேற்றைய சாலை விபத்தில் பலியானார். இது குறித்து கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் கிடியோன் கிமையோ உறுதி செய்த பிறகே வெளியுலகிற்கு இந்த செய்தி தெரிய வந்தது.

24 வயதான கிப்டம் சிகாகோ மாரத்தான் போட்டியில் 2 மணி நேரம் 35 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். மேலும் லண்டன் மாரத்தானை 2 மணி நேரம் ஒரு நிமிடம் 25 வினாடிகளில் கடந்து, முன்னதாக உலக சாதனை புரிந்தார். 2022 வாலென்சியா மராத்தானில், கெல்வின் கிப்டம் 2 மணிநேரம் ஒரு நிமிடம் 53 வினாடிகளில் கடந்து, வரலாற்றில் மிக வேகமான அறிமுக மராத்தான் சாதனை என்பதை படைத்தார்.

இவற்றில் சிகாகோ சாதனை, மாரத்தான் ஓட்டங்களில் இதுவரையிலான உலக சாதனையாக உள்ளது. அந்த வகையில் உலகின் நெ.1 மாரத்தான் சாதனையாளராக கிப்டம் அங்கீகரிக்கப்பட்டார். அடுத்த நிகழ்வாக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் ரோட்டர்டாம் மாரத்தானில் அவர் பங்கேற்க இருந்தார். இது உலக சாதனை படைத்த பிறகு அவரது முதல் நிகழ்வாக காத்திருந்ததில், விளையாட்டு உலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்பை உருவாக்கி இருந்தது. இதற்கிடையே, கிப்டமின் அகால மரண சேதி சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உலுக்கி உள்ளது.

1newsnationuser6

Next Post

பெரும்பான்மையை நிரூபித்த நிதீஷ் குமார்.! 129 வாக்குகளுடன் வெற்றி.!

Mon Feb 12 , 2024
பீகார் மாநிலத்தின் முதலமைச்சரான நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வந்தார். இந்நிலையில் திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக 129 பேர் வாக்களித்தனர். எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை. மேலும் […]

You May Like