ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

ஹாப்பி பர்த்டே பிரபாஸ்.. தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்..

பாகுபலியில் லிங்கத்தை சுமந்து கொண்டு நடந்து வரும் பிரபாஸை ரசிகாதவர்களே நிச்சயம் இருக்க முடியாது. துடிப்பான நடிப்பு, துள்ளலான பார்வை என்று இந்தியாவின் most eligible bachelor ஆகும் அத்தனை தகுதிகளுக்கும் சொந்தக்காரர் தான் டார்லிங் பிரபாஸ். தெலுகு சினிமா உலகின் நாயகன் பிரபாஸ் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

prabhas4

சென்னையில் பிறந்த பிரபாஸ் வளர்ந்ததெல்லாம் ஹைதராபாத் தான். 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற படம் மூலம் அறிமுகமானார். ஜிம் பாய் ஆக வலம் வந்த பிரபாஸ் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ரபெல் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், மிர்ச்சி, வர்ஷம், டார்லிங், ரபெல்,பில்லா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் நாயகனாக மட்டுமே திகழ்ந்த இவரை உலக அளவில் அடையாளப்படுத்தியது பாகுபலி தான். ராஜமெளலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான காவியம் தான் பாகுபலி. இதில் ஹீரோவாக நடித்த பிரபாஸ் பாகுபலியாகவே பலராலும் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறார். மகிழ்மதியின் சிம்மாசனத்தில் மகேந்திர பாகுபலியாக அமர நினைத்து பின் அமரேந்திர பாகுபலியாக மக்கள் மனங்களை கொள்ளை கொண்டார்.

baahubali_prabhas

பிரம்மாண்டம் என்றால் என்ன என்பதை இந்த படம் மூலம் தெரிந்து கொள்ளலாம். 2015 ஆம் ஆண்டு பாகுபலி முதல் பாகம் வெளியானது. அவ்வளவுதான் ஒட்டு மொத்த பெண்களின் ட்ரீம் பாய் ஆனார் பிரபாஸ். இந்தியா மட்டும் இன்றி சீனா போன்ற நாடுகளிலும் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதன்பின் இந்திய சினிமாவின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. பாகுபலி 2 ஆம் பாகம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்திற்காக சில ஆண்டுகள் மிகவும் கடுமையான டயட்களை இருந்து வந்தாராம் பிரபாஸ்.

28 1493359741 bahubali2createsrecordsevenbeforerelease 26 1493188542

அதேபோல நடிகை அனுஷ்காவுடன் இவரை இணைத்து செய்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எட்டிப்பார்க்கும். இருவரும் எப்போது கேட்டாலும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே எனக்கூறி சிரித்து விடுகின்றனர். உலக புகழ்பெற்ற Madame tussauds wax மியூசியத்தில் இடம் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமைக்கும் இவர் சொந்தக்காரர். வேலையில் முழு ஈடுபாடுடன் நடந்து கொள்பவர்.

baahubali prabhas and anushka

கடந்த ஆகஸ்ட் மாதம் இவரது நடிப்பில் வெளியான சாஹோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கொரோனா ஒருபுறம் இருந்தாலும், தன் வசம் மிகப்பெரிய படங்களை பிரபாஸ் வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு அவர் நடித்து வந்த ‘ராதே ஷியாம்’ படம் கொரோனா பெருந்தொற்றால் வெளியாகவில்லை.. லாக்டவுன் காலத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.. ராதா கிருஷ்ணன் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது.

prabhas as vikram aditya in radhe shyam first look main

பிரபாஸ் தனது ஆதிபுருஷ் படத்தை அறிவித்தபோது, ரசிகர்கள் அதனை இணையத்தில் கொண்டாடி தீர்த்தனர். பீரியாடிக் படமான இதில் பிரபாஸ், ராமராகவும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சைஃப் அலிகான் ‘ராவணன் கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான அதி புருஷ் டீஸர் மற்றும் லோகோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹிந்தி – தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படம், தமிழ், மலையாளம், கன்னடம அகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. இப்படம் வரும் 2022-ம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

adipurush 1200

இந்த 2 படங்களை தவிர, பிரபாஸ் 21 படத்திலும் அவர் நடித்து வருகிறார். அமிதாப், தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்துள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாக உள்ளது.. பெரிய திரைகளில் தோன்றும் ஒவ்வொரு முறையும் பிரபாஸ் ரசிகர்களை இதயங்களை கொள்ளையடித்து விடுகிறார் என்பது மறுப்பதற்கு இல்லை. கொரோனா நிலை சரியான பிறகு அவரது படங்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.. நடிப்பு, நடனம் என ஆல்ரவுண்டராக வளம் வரும் பிரபாஸை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வதில் மகிழ்ச்சி.

1newsnationuser1

Next Post

இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு மருந்து ரெடி..! கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்..!

Fri Oct 23 , 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதற்கு எதிரான போராட்டத்தை உலக நாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இரவு பகலாக ஆய்வாளர்கள் இந்த கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிக்க முயற்சித்து வருகின்றனர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலக […]
இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு மருந்து ரெடி..! கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்..!

You May Like