பாதிப்பை ஏற்படுத்தும் காற்று மாசு… புதிய கட்டுப்பாடுகள் அமல்…

காற்றுமாசு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசு பல மடங்கு அதிகமானதால் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் டீசல் லாரிகள் அனுமதிக்கப்படாது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தொடக்கப்பள்ளிகள் இயங்காது. தனியார்மற்றும்அருசு பணியாளர்கள் 50 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்தபடியே பணியை மேற்கொள்ள வசதிகள் தரப்பட்டுள்ளது.

அனைத்துவித கட்டுமானங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், சந்தைகள் இயங்க நேரக்கட்டுப்பாடு உள்ளது. தொழில்துறை மாசுபாடுகளை கண்காணிக்க 33 சிறப்பு குழுக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. இரண்டு தினங்களாக காற்றின் தரக்குறியீடு 400 வரை எட்டி மிகவும் மோசம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை விடப்படுகிறது. அதே போல் 5ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு, பள்ளிக்கு வெளியே சென்று படித்தல் விளையாடுதல் போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது” என்றார்.

அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும், டெல்லியில் தனியார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பும் காற்றின் மாசு அதிகரிப்புக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன எண் அடிப்படையில் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்தும் டெல்லி அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

டெல்லியில் காற்று மாசினை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை வரும் 10 ஆம் தேதி அவசர வழக்காக எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Post

யு.ஜி.சி. நெட் தேர்வு முடிவுகள் வெளியானது…

Sat Nov 5 , 2022
யு.ஜி.சி. நெட் தேர்வு எனப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. யு.ஜி.சி. நெட் தேர்வுகள் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம். கொரோனா தொற்று காரணமாக நடந்த ஆண்டு டிசம்பர் […]
மாணவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும் முழுமையாக திருப்பித் தர உத்தரவு..!

You May Like