வாடிக்கையாளர் கவனத்திற்கு…!எச்டிஎஃப்சி வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்துவதாக அறிவிப்பு…!

எச்டிஎஃப்சி வங்கி‌ நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக அறியப்படும் எச்டிஎஃப்சி வங்கி‌, ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்வுக்கு ஏற்ப வங்கி நிரந்தர வைப்புத்தொகை வட்டி விகிதத்தை பிப்ரவரி 8 அன்று 6.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி, சமீபத்திய நிரந்தர வைப்புத் தொகைக்கான விகிதங்கள் 17 பிப்ரவரி 2023 முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது. சமீபத்திய வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, எச்டிஎஃப்சி வங்கி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை பொது மக்களுக்கு 4.75% முதல் 7.00% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 5.25% முதல் 7.75% வரையிலும் வழங்குவதாகக் கூறியுள்ளது.

Vignesh

Next Post

சட்டப்பேரவையைசுற்றி பாதுகாப்புப் படை...! அருணாச்சலப் பிரதேசத்தில் தொடரும் பதற்றம்...!

Sun Feb 19 , 2023
அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டாவது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகரில், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து, இரண்டாவது நாளாக வன்முறைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலையை மறித்து, பான் அருணாச்சல கூட்டு வழிநடத்தல் குழு-ஏபிபிஎஸ்சியின் 13 அம்ச கோரிக்கை சாசனங்களை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், இட்டாநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததால், நீதிமன்றம், ராஜ் பவன் […]

You May Like