’அவரிடம் ஏதோ ஒன்னு இருக்கு’..! நித்தியை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரியா ஆனந்த்..!

நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று நடிகை பிரியா ஆனந்த் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார்களில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நித்தியானந்தா. ஆரம்பத்தில் இவரை கடவுளின் மறு உருவமாக பார்த்து வந்த மக்கள், இவரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பிறகு இவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர். இவர், நடிகை ரஞ்சிதாவுடன் படு நெருக்கமாக இருக்கும் ஆபாச காட்சிகள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த நல்ல பெயரும் கெட்டுப் போனது. அதன் பிறகு இவர் குறித்த பல சர்ச்சைகள் ஊடகங்களில் வெளிவந்தது.

நாய்க்கும்.. பூனைக்கும்.. சிட்டிஷன்ஷிப்; அடேய் நித்தி ஓவாரா தான்  போய்க்கிட்டு இருக்க...

அதிலும் முக்கியமாக, பாலியல், கடத்தல், மோசடி புகார் உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது இருக்கிறது. ஆனால், இது எதற்கும் அசராத நித்தியானந்தா தற்போது கைலாசா என்ற ஒரு தனி நாட்டில் ராஜ்ஜியம் செய்து கொண்டிருக்கிறார். அங்கு அவரை சுற்றி பல சீடர்கள் இருக்கின்றனர். மேலும், விலைமதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நிறைய பணங்கள் அவர் கைவசம் இருக்கிறதாம். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருந்தும் கூட நிறைய பக்தர்கள் வந்து அவருடைய ஆசிரமத்தில் தங்கிச் செல்வதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு இவருடைய உடலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், மரணம் அடைந்து விட்டதாகவும் பல செய்திகள் உலா வந்தன. ஆனால், நித்தியானந்தா அதற்கு மறுப்பு தெரிவித்து நான் நலமுடன் இருக்கிறேன் என்று தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நடிகை பிரியா ஆனந்த் பிறந்த தினம் இன்று இவரைப்பற்றிய சில வரிகள் - Cinemapluz

இந்நிலையில், தமிழில் ’வாமனன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரியா ஆனந்த் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். ”எனக்கு நித்தியானந்தா சுவாமிகளை மிகவும் பிடிக்கும் என்றும் அவர் மீது தனக்கு அளவு கடந்த க்ரஷ் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அவரை திருமணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம் என்றும் அப்படி செய்து கொண்டால் என் பெயரை கூட மாற்ற தேவையில்லை, பிரியா ஆனந்த், நித்தியானந்த் என்ற பெயர்கள் நன்றாக மேட்ச் ஆவதாகவும் கூறியுள்ளார்.

Famous Actress Priya Anand Wants To Marry Nithyananda | 'நித்தியானந்தாவை  திருமணம் செய்ய ஆசை' - பிரபல நடிகை பிரியா ஆனந்த்

அதனால், பெயரை மாற்றும் கஷ்டம் கூட எனக்கு இல்லை என்று சமூக வலைத்தளங்களில் மிகவும் ஓபனாக பேசி இருக்கிறார் பிரியா ஆனந்த். மேலும், அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக கூறிய அவர், அதனால் தான் அவரைச் சுற்றி இத்தனை பேர் இருப்பதாகவும், அவருக்கு எல்லோரையும் சுலபமாக ஈர்க்க தெரியும் என்றும் பேசியுள்ளார். பிரியா ஆனந்தின் இந்த பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களை வட்டமடிக்கத் துவங்கியுள்ளது.

Chella

Next Post

இந்த டீலிங் நல்லா இருக்கே, ரூ 200 க்கு வாங்கிய செருப்புக்கு, 25,000 நஷ்ட ஈடு...!

Fri Jul 8 , 2022
திருப்பூர் மண்ணரை கருமாரம்பாளையத்தில் வசித்து வருபவர் சுபா(23). இவர் கடந்த 30-12-2021 அன்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள சிங்கப்பூர் ஷாப்பிங் கடையில் 200 ரூபாய்க்கு, இரண்டு ஜோடி காலணி வாங்கினார். இதற்கு கடையில் ரசீது கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை. இந்தநிலையில் சுபா 200 ரூபாய் கொடுத்து வாங்கிய காலணி, கடந்த 7-1-2022 அன்று அறுந்து விட்டது. உடனே சுபா அந்த அருந்த காலணியை எடுத்து சென்று கடையில் கேட்டுள்ளார். அவர்கள் […]

You May Like