”என்னைக்குமே அவரு தான்”..!! நடிகர் ரஜினிகாந்துக்காக தனுஷ் போட்ட பதிவு..!!

என்றுமே நான் ரஜினிகாந்த் ரசிகன் என்பதை ட்வீட் போட்டு மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகர் தனுஷ்.

இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் தனுஷ் தனக்காக ஒரு கதை வைத்திருந்ததாகவும் ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் தன்னால் அதில் நடிக்க முடியவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இருப்பினும், அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் நடிகர் தனுஷ் தொடர்ந்து தான் ரஜினிகாந்த் ரசிகன் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தாலும், அவரது இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ படம் ஆரம்பிக்கும் போதே தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார் நடிகர் தனுஷ். அதேபோல, ‘லால் சலாம்’ டிரெய்லர் வெளியான போதும் வாழ்த்துக் கூறினார்.

இன்று படம் வெளியான நிலையில், நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ‘லால் சலாம்’ வெற்றியடைய வேண்டும் என வாழ்த்தி ‘என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்’ என ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவுடன் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தையும் ரீபோஸ்ட் செய்துள்ளார் தனுஷ்.

1newsnationuser6

Next Post

"பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்த.."! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்.!

Fri Feb 9 , 2024
மணப்பாறையில், சாதிய ரீதியாக வந்த தகராறில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவன் மீது, மாற்று சமூகத்தை சேர்ந்தவரின் மகன் சிறுநீர் கழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, மணப்பாறையில் விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சார்ந்த சிறுவனுக்கும், மாற்று சமூகத்தை சேர்ந்த நபருக்கும், சமூக வேறுபாடு காரணமாக தகராறு […]

You May Like