ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..!

"இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதி.." கொரோனா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹீலர் பாஸ்கர் கைது..

கொரோனா வைரஸ் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த ஹீலர் பாஸ்கரை கோவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

healer bhaskar

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மற்ற நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது இந்தியவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உட்பட 5 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. அந்த வகையில் கொரோனா குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர் ‘ இலுமானிட்டிகளின் திட்டமிட்ட சதி தான் கொரோனா. மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.

தமிழ்நாட்டில் 15 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதே நம்மை சாகடிப்பதற்கு தான். இப்படி தான் சீனாவிலும் இத்தாலியிலும் தொடங்கினார்கள், அது தற்போது தமிழ்நாட்டில் நடக்கிறது. நாம் நன்றாக தான் இருக்கிறோம். எனவே அரசு அதிகாரிகள், தங்கள் மேலதிகாரிகள் சொல்வதை கேட்க கூடாது” என்று பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஹீலர் பாஸ்கர் மீது சுகாதாரத்துறை சார்பில் கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களிடையே பீதியை கிளப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், அரசு அதிகாரிகளை தரக்குறைவாக விமர்சித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

கொரோனா பற்றிய வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை...திருச்சி ஆட்சியர்...

Fri Mar 20 , 2020
திருச்சியில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 12 படுக்கைகள் அடங்கிய கொரோனா சிகிச்சை வார்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் […]
trichy collector

You May Like