நமது உடல் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வாழவே நாம் விருப்புகிறோம். அதே வேளையில் முகமும் பளபளவென மின்னவும் எப்போதும் இளமை தோற்றம் இருக்கவும் விரும்புகிறோம். அதற்காக இயற்கை நமக்கு கொடுத்த முக்கனிகளில் ஒன்று பலா.

மலைப்பகுதிகளில் கிடைக்கும் இந்த பலாக்கனியில் பல நோய்களை எதிர்க்கும் சக்தி கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை தொடர்ப்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது. இப்போது பெருகி வரும் மொபைல் மற்றும் கணினி பயன்பாடு சிறு வயதிலேயே பார்வை கோளாறு ஏற்ப்பட காரணமாகிறது. இதனை பலாப்பழம் சரி செய்ய உதவுகிறது.
பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளதால் தைராய்டு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. விளையாட்டு வீரர்கள், அதிக உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் இந்த பலாக்கனியை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். குடல் புற்று நோயையும் சரி செய்கிறது. இதில் மக்னீசியம், பான்தொதீனிக் அமிலம் போன்றவையும் உள்ளதால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகையை குணப்படுத்துகிறது.

பலாப்பழம் சாப்பிடுவதால் தோலில் வறட்சி குறைந்து இளமை தோற்றம் அதிகரிக்கிறது. பலாக்கொட்டையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து அதனை அரைத்து முகத்தில் தேய்த்து வருவதால் ஆறு வாரங்களில் மாற்றத்தை உணரலாம். முடி உதிர்வதையும் சரி செய்கிறது. பலாப்பழத்தால் எலும்பு மற்றும் பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. எனவே ‘ஆஸ்டியோபொராசிஸ்’ என்ற எலும்பு பிரச்சனை வராமல் தடுக்கிறது.