பெண்கள் பெரும்பாலும் திருமணம் போன்ற விசேஷ நாட்களில் உள்ளங்கை, கால்களில் மருதாணி வைப்பார்கள். அழகுக்காக வைக்கப்படும் இந்த மருதாணியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளது.

மருதாணி வைப்பதால் குளிர்ச்சி தன்மை அதிகரிக்கிறது. உடல் சூட்டை குறைக்கிறது. உடல் சூட்டினால் உண்டாகும் வயிறு உபாதைகளை சரி செய்கிறது.
மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து தலைக்கு குளித்து வர தலைமுடி பிரச்சனைகள் நீங்கும். முடி உதிர்தல், இளநரை, வழுக்கை போன்றவற்றிற்கு தீர்வாக அமைக்கிறது.

மருதாணி இலையை அரைத்து தீக்காயங்களுக்கு தடவி வர விரைவில் குணமடையும். இதனை பவுடராக அரைத்து நெற்றியில் பூசி வர தீராத தலை வலியையும் நீங்கும்.
மருதாணி இலையை நீரில் போட்டு அந்த நீரை தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் வாய் கொப்பளித்து வர தொண்டை கரகரப்பு, தொற்று போன்றவை நீங்கும்.