நம் முன்னேர்கள் இயற்கை மருத்துவத்தையே சார்ந்திருந்தனர். அதனால் எந்த காய்கறியில் என்ன சத்து உள்ளது எந்த பழத்தில் என்ன விட்டமின் உள்ளது எந்த கீரை எந்த நோயை குணப்படுத்தும் என்பது எந்த பள்ளியும் கற்று தரவில்லை என்றாலும் அவர்களுக்கு அது அத்துப்படி.

இது போன்று அவர்கள் அறிந்து வைத்த, நாம் நாளடைவில் மறந்து போன ஒன்று தான் இந்த மூக்கிரட்டை கீரை. இது தரையில் படரும் கொடி வகையை சேர்ந்தது. இதன் இலைகள் தான் கீரையாக உணவில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியது. அவற்றில் உள்ள மருத்துவ குணங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த கீரை உடலின் அதிகப்படியான கழிவுகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்க வல்லது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
கல்லீரலின் செயல்ப்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்ப்படும் சிறுநீர் தொற்றை சரி செய்கிறது.
கோடைக்காலத்தில் இந்த கீரை மிகுந்த பயனளிக்கும். அந்த நாட்களில் நீர்க்கடுப்பு பிரச்சனையை சரிசெய்து சிறுநீர் எவ்வித வலியும் இன்றி இயற்கையாக வெளியேற உதவுகிறது.

இதன் இலையை சாறு எடுத்து குடித்து வர இன்சுலின் பிரச்சனைகள் நீங்கும். இரத்தத்தில் குளுகோஸின் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் உடலுக்கு தேவையான பிளாஸ்மா இன்சுலினை அதிகரித்து நீரிழிவு நோயிலிருந்து காக்க உதவும்.
இதன் வேர் பகுதியை பொடித்து ஜூஸ் போட்டு குடித்து வர கண் தொடர்பான பிரச்சனைகள், மாலைக்கண் நோய் போன்றவை விரைவில் குணமடையும். இதய அழுத்தம் குறையும்.
மூட்டு பகுதியில் ஏற்ப்படும் வலி, இரத்தக்கட்டு போன்றவை இதன் இலையால் பற்று போட விரைவில் குணமடையும்.
இனி என்ன வாரம் இரண்டு முறை உண்ணும் உணவில் இது போன்ற பயனுள்ள கீரைகளை சேர்த்து பயன்பெறுங்கள்.