fbpx

நீரை பாதுகாக்க செம்பு பாத்திரத்தை பயன்படுத்தும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை தான்!

பழங்காலத்தில் மண்பாண்டங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது. அந்த அளவிற்கு மண்பாண்டங்கள், உணவை பாதுகாத்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது நவீன காலம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு உணவை தயாரித்து வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள்.

பழங்காலத்தில் இருந்த மண்பாண்டங்கள் என்ற பாரம்பரிய முறை முற்றிலுமாக தற்போது மறைந்தே போய்விட்டது. ஆனால் பழங்காலங்களில் இருந்த பழக்க வழக்கங்களை நாகரீகம் என்ற பெயரில் கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்கள் தவிர்த்து வந்ததின் எதிரொலியாக தற்போது மனிதன் சாப்பிடும் உணவில் கூட விஷம் கலந்து விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

50 ஆண்டுகளுக்கு முன்னர் அனைவரின் வீட்டிலும் அம்மிக்கல், ஆட்டுக்கல் என்ற 2 பொருட்கள் இருக்கும். ஆட்டுக்கல்லில் இட்லி, தோசை உள்ளிட்ட பொருட்களுக்கு மாவை தயார் செய்து அதில் இட்லி செய்து சாப்பிட்டால் அதன் சுவையே வேறு விதமாக இருக்கும். அதே போன்று அம்மி கல்லில் சட்னி போன்றவற்றை தயார் செய்து அவற்றை ருசி பார்த்தால் அவற்றின் சுவை தனிதான். ஆனால் இப்போது கிரைண்டர், மிக்ஸர் கிரைண்டர் என்று பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் வந்துவிட்டபடியால் நேர சுருக்கம் என்று சொல்லிக்கொண்டு முழுவதுமாக ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல்லை தமிழர்கள் மறந்தே போய்விட்டனர்.

தமிழர்கள் பல பழங்கால பழக்கவழக்கங்களை முற்றிலுமாக மறந்து போய்விட்டனர் இதற்கு உதாரணமாக தாமிரம் எனப்படும் செம்பு பாத்திரத்தில் அல்லது பாட்டிலில் வைத்த நீரை குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை வழங்கும் என்று விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். தண்ணீரை சுத்திகரிக்கும் ஆற்றல் செம்பு அல்லது தாமிரத்திற்கு இருக்கிறது. பலர் நீரை சுத்திகரிப்பதற்கு பதிலாக அதனை இயற்கையாக சுத்திகரிக்க செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து பருக விரும்புகிறார்கள்.

இரவில் செம்பு பாத்திரம் அல்லது பாட்டிலில் நீரை நிரப்பி வைத்து மறுநாள் காலை வரையில் அந்த நீர் செம்பு பாத்திரத்தில் இருக்கும் போது அதில் இருக்கின்ற காப்பர் அயான்ஸ் என்று சொல்லப்படும் ஒரு வகையான திரவம் சிறிய அளவில் நீரில் கலந்து விடுகிறது. இது தண்ணீரில் இருக்கின்ற பாக்டீரியா வைரஸ் போன்ற நுண் கிருமிகளை அடியோடு அழித்து நீரை சுத்தம் செய்கின்றது. ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள இந்த செம்பு நீர் உடலில் ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான அணுக்களை ஏற்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கிறது.

தாமிர பாத்திரத்தில் வைத்த தண்ணீருக்கு வாதம் மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை இருக்கிறது. செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு சிறப்பாகும். இருந்தாலும் அதனை குடிக்கும் முன்னர் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். இல்லை என்றால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் விதமாக மாறிவிடும்.

செம்பு பாத்திரங்களை அவ்வப்போது கழுவாமல் பயன்படுத்தி வந்தால் அதில் பச்சை நிறத்தில் பாசி போல ஏற்படுவதை நாம் பார்க்கலாம். அது வெறும் கரையோ, அழுக்கோ இல்லை. அந்த பச்சை நிறம் ஒரு வகையான ரசாயனம். காப்பர் பாத்திரம் என்பது தண்ணீர் மற்றும் காற்றுடன் கலந்து காப்பர் கார்ப்னேட் என்ற ரசாயனத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே தான் செம்பு பாத்திரத்தில் பச்சை நிற படலம் ஏற்படுகிறது. இந்த கார்பனேட் கெமிக்கல் தண்ணீருடன் கலந்து நம்முடைய வயிற்றுக்குள் செல்லும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

பலர் உறங்குவதற்கு முன்னர் ஒரு செம்பு பாத்திரத்தை தரையில் வைத்து காலை எழுந்தவுடன் அதன் தண்ணீரை பருகுவார்கள். ஆனால் அப்படி செய்வது தீங்கை விளைவிக்கும். தாமிரநீரை தரையில் வைக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. இது ஒரு மர மேஜையில் வைக்கப்பட வேண்டும் இல்லை என்றால் அது ஆரோக்கியத்திற்கு தீங்காக முடியும்.

செம்பு நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும். இருந்தாலும் அமிலத்தன்மை கொண்ட நோயாளிகள் தாமிர நீரை குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நீரின் தாக்கம் அசிடிட்டி நோயாளிகளுக்கு பாதிப்பை உண்டாக்குமாம்.

காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், உணவருந்திய பின்னர் தாமிரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை குடிப்பது தீங்கை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதன் மூலமாக செரிமானம் நன்மை வழங்கும். உணவுக்குப் பின்னர் அதனை குடிப்பது செரிமானம் குறித்த பிரச்சனைகளை உண்டாக்கும்.

இந்த தண்ணீரை குடிப்பதன் மூலமாக தங்களுடைய ஆரோக்கியம் மேம்பட வேண்டும் என்றால் அந்த நீரை ஒரு செப்பு பாத்திரத்தில் குறைந்தது 8 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். செப்பு பாத்திரத்தில் 2 நாட்கள் தண்ணீரை சேமித்து வைக்கலாம். ஆனாலும் மேலே தெரிவித்ததை போல பாத்திரத்தை அவ்வப்போது முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

Kathir

Next Post

Alert: இன்று மாலை உருவாகும் புதிய புயல்...! இந்த மாவட்டத்தில் எல்லாம் கனமழை எச்சரிக்கை...!

Wed Dec 7 , 2022
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை Mandous புயலாக வலுவடைய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு […]
புரேவி

You May Like