fbpx

உறங்கும் முன்பு பால் குடிக்கலாமா ? உடலுக்கு உண்மையிலேயே நல்லதா ?

பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஆரோக்கியம்தான். ஆனால் அதை எப்போது குடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் அந்த வகையில் அனைவரும் உறங்குவதற்கு முன்பாக பால் குடித்துவிட்டு உறங்குவார்கள். இது உண்மையிலேயே உடலுக்கு நல்லதா ? என்பதை பார்க்கலாம்.

பாலில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. பாலில் கல்சியம் சோடியம் , புரோட்டீன் , விட்டமின் ஏ, கே மற்றும் பி.12 , கொழுப்பு, அமினோ ஆசீட் , ஆண்டி ஆக்சிடண்ட் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் வெறும் பாலாக குடிக்காமல் இஞ்சி ஏலக்காய், மஞ்சள் கலந்து நன்றாக கொதிக்க வைத்து இரவு நேரத்தில் குடித்தால் நிம்மதியான தூக்கம் பெறலாம். அதே நேரம் குறட்டை விடும் பழக்கத்தை இது குறைக்க உதவுகின்றது.

இவ்வளவு நன்மைகள் உள்ளதா ? என கேட்கும் நேரத்தில் இரவு நேரத்தில் பால் குடிப்பது நல்லதல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர். பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரை நிறைந்தது. எனவே உறங்கும் முன்பு குடிப்பது நல்லதல்ல. அதோடு நுரையீரல் இரவு நேரத்தில் சவேலை செய்யும் . அந்த நேரத்தில் பால் அருந்திவிட்டு உறங்கினால் நுரையீரல் தன் வேலையை செய்யாமல் பாலை செரிக்க வைத்து ஊட்டச்சத்துகளை பிரித்து அனுப்பும் வேலையில் இறங்கிவிடுமாம்.

எனவே பகலில் பால் குடித்தால் எளிதாக சீரணம் ஆகி நம் உடலுக்கு நல்லதை விளைவிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். பால் குடிப்பதால் உங்களுக்குள் என்ன மாதிரியான மாற்றங்கள் கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். இரவு பால் குடிப்பதால் உடலில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தால் குடிக்கலாம் அல்லது சில பக்கவிளைவுகளை அனுபவித்தால் தவிர்த்துவிடுதல் நல்லது.

Next Post

விவசாயிகளுக்குசெம வாய்ப்பு... 50% மானியத்தில்‌ நெல் விதைகள்...! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Tue Sep 20 , 2022
பாரம்பரிய நெல்‌ விதைகள்‌ 2 மெட்ரிக்‌ டன்‌ 50 சதவீத மானியத்தில்‌ வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது செய்தி குறிப்பில்; வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை மூலம்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ பாரம்பரிய நெல்‌ விதைகள்‌ 2 மெட்ரிக்‌ டன்‌ 50 சதவீத மானியத்தில்‌ வழங்க அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில்‌ இருப்பில்‌ வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்‌ பாரம்பரிய நெல்‌ ரகங்களின்‌ […]

You May Like