இயற்கை தரும் அனைத்து பழங்களும் அனைவரின் உடலும் ஏற்றுக் கொள்ளும் என்பதில் சிறிது ஐயம் தான். சிலருக்கு உடலில் ஏற்பட்டுள்ள நோயால் சில உணவை சாப்பிட முடியாமல் போய்விடும். அதன் வரிசையில் சீதாப்பழத்தை இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.
சீதாப்பழம் அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் மற்றும் மேனி தோல் பளபளக்காக வைத்து கொள்ள உதவும். மேலும் ரத்த சோகை உள்ளவர்களும் சீதாப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
முடி உதிர்வு போன்ற பிரச்சினை உள்ளவர்கள் சீதாப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அதிகளவு பைபர் மற்றும் மெக்னீசிய ஊட்டச்சத்து உள்ளதால் அஜீரண கோளாறுகளை நீக்கும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. அதனை தொடர்ந்து சிறுநீரகம் மற்றும் கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களும் சீதாப்பழத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.