பரவி வரும் நோய்களை தடுக்க இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கபடவில்லை எனினும் நாம் அன்றாடம் உட்க்கொள்ளும் உணவுகளில் சில பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். இதனால் நோய் தொற்று நம்மை தாக்காமல் தடுக்கலாம்.

தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளலாம். எப்போதும் சேர்ப்பது தான் எனினும் சற்று கூடுதாலாக சேர்த்துக் கொள்ளவது நல்லது.

மிளகு ஒரு நல்ல மருந்து. உணவில் காரத்துக்காக சேர்க்கும் மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்துக் கொள்ளலாம். வீட்டில் உள்ள குழந்தைகள் வயதானோருக்கு பாலில் மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து கொடுப்பது நல்லது.
இஞ்சி, பூண்டு, எலுமிச்சை போன்றவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தண்ணீரில் காய்ச்சி அந்த நீரை காலை மாலை என இரண்டு வேளைகளிலும் எடுத்துக்கொள்ளுங்கள். இனிப்பு சுவைக்காக சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கனி. இதனை ஜூஸ் செய்து அவ்வப்போது குடிக்கலாம். கொய்யா கனியிலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
வாரம் இரண்டு முறை கீரை எடுத்துக் கொள்ளுங்கள். முருங்கை கீரை அதிக இரும்பு சத்து கொண்டது. மிளகு ரசம் தினமும் குடியுங்கள்.
உணவு பொருட்களை முறையாக சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். இயற்கை மருத்துவத்தால் நோயின்றி வாழுங்கள்.