பொதுவாக கிராமப்புறங்களில்அம்மாவாசை அன்று வாழைக்காய் சமையல் செய்வது வழக்கம். மற்ற நாட்களிலும் ஆரோக்கியமான காய்கறிகளை கூட்டு பொரியல் என தினந்தோறும் உணவில் எடுத்துக்கொள்வர். இதனால் தான் அவர்கள் நோய்நொடியின்றி அதிக நாள் வாழ்ந்தனர்.

ஆனால் பெருகி வரும் உணவு காலச்சரம் காய்கறிகளை நமது உணவிலிருந்து பிரிகிறது. இதற்கு தீர்வு நாம் அவற்றின் பயனறிந்து மீண்டும் அந்த உணவு பழக்கங்களை தொடர்வதே. தற்போது சர்க்கரை நோய் பெரும்பாலோர் சந்த்தித்து வரும் பிரச்சனை. மனிதனின் கணையத்திலிருந்து உருவாகும் இன்சுலின் உடலின் மற்ற பகங்களுக்கு தேவையான குளுகோஸை இரத்தத்தின் வழியாக கொடுகிறது. இந்த இன்சுலின் அளவு குறையும் போது தான் சர்க்கரை நோய் ஏற்ப்படுகிறது.

இதற்கு வாழைக்காய் சரியான தீர்வு. இது நமது உடலில் குளுகோஸை தேவையான அளவு வைத்திருக்க உதவுகிறது. இன்சுலின் சுரக்கவும் உதவி செய்கிறது. குறிப்பாக அதில் அதிக நார் சத்து உள்ளதால் ஜீரண கோளாறும் சரி செய்யப்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மேலும் வாழைக்காயில் பொட்டாசியம் சத்து உள்ளதால் இதய பிரச்சனைகளுக்கும் நல்லது. வைட்டமின்கள் தாது உப்புகள் நிறைந்துள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கும் நல்லது. மல சிக்கலை போக்குகிறது.