இந்த அசாதாரணமான சூழலில் நாம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட நாள் தோறும் முயற்சித்து வருகிறோம். கொரோனா நோய் போன்ற கொடூரனமான நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. ஆனால் நாம் அன்றாடம் செய்யும் சில விஷயங்கள் நம் நோய் எதிர்ப்பு திறனை குறைக்கிறது.

தெரிந்தோ தெரியாமலோ நாம் கடைபிடிக்கும் சில பழக்கங்கள் நம் நோய் உடலில் எதிர்க்கும் திறனை குறைக்கிறது. அவற்றில் ஐந்து பழக்கங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
மது, புகை போன்ற போதை பழக்கம்:
மது, புகை நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்பது தெரிந்தாலும் சிலர் இந்த பழக்கத்தை விடுவதாக இல்லை. இது நம் உடலுக்கு கேடு விளைவிப்பதுடன் உடலின் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.

இரவு தூங்கும் முன் காஃபின் நிறைந்த உணவுகளை தவிர்த்தல்:
சிலருக்கு இரவு தூங்கும் முன் காபி, டீ அருந்தும் பழக்கம் உள்ளது. இதில் உள்ள காஃபின் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். மேலும் ஒழுங்கற்ற தூக்கம் நோய் எதிர்க்கும் சக்தியை குறைக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவு முறை:
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நிறைய சர்க்கரை, கார்ப்ஸ் போன்றவை அடங்கியுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியம் பலவீனப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அவைகளில் சேர்க்கப்படும் கெமிக்கல் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்:
சுத்திகரிக்கப்பட்ட உணவுகளில் இயற்கை மருத்துவ குணங்களும் சுத்திகரிக்கப்பட்டு வெறும் பார்வைக்கு அழகான உணவாகவே கிடைக்கிறது. இதனை உண்பதால் எவ்வித ஆரோக்கிய சத்துகளும் உடலுக்கு கிடைப்பத்தில்லை. அனைத்தும் வீணாகவே செல்லும். இதனை தவிர்த்து இயற்கை முறையில் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

பாஸ்ட்புட்:
இது தற்போது வேகமாக பரவி வரும் உணவு காலச்சாரம். ஆனால் இது நம் உடலை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்படுத்த கூடியது. பாஸ்ட் புட் உணவுகளில் அதிக அளவு கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.
இந்த பழக்கங்களை தவிர்த்து இயற்கை உணவு முறைக்கு மாறுங்கள். உடலை ஆரோக்கியத்துடன் பார்த்துக்கொள்ளுங்கள்.