இந்த சத்து குறைந்தால் ஹார்ட் அட்டாக் வரும்? ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!

நமது உடலில் மக்னீசியம் சத்துகள் குறைவதால் இதயம் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த குறைப்பாட்டால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மக்னீசியம் குறைபாடு என்பது மக்னீசியம் எனும் ஊட்டச்சத்து ஆனது ரத்தத்தில் குறைவாக இருப்பதை உணர்த்துகிறது. இந்த குறைபாடு உடல் ஆரோக்கியத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. கீழ்க்கண்ட அறிகுறிகள் மக்னீசியம் குறைபாட்டால் ஏற்படுகின்றன.இதயத்தில் பிடிப்பு, வலி போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது என்றால் கவனமாக இருக்கவும். ஏனெனில் உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி இதயத்துடிப்பில் மாற்றம் வராமல் தடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் மக்னிசியம் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதனால் கட்டாயமாக மக்னிசியம் உடலில் அதிகப்படுத்துவது அவசியமானதாகும்.

தூக்கப்பிரச்னை, தசை இறுக்கம், குறைவான ஆற்றல் ஆகியவை மக்னீசியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்அதற்கு தேவையான ஆலோசனைகளை இப்பொழுது பார்க்கலாம். பெரும்பாலான மக்கள் உடல் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு மக்னீசியம் எடுத்துக் கொள்வதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வளர்ந்த நாடுகளில் 10 முதல் 30 சதவிகிதம் வரையிலான மக்களுக்கு மிதமான மக்னீசிய குறைபாடு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் குறைபாடு கவனிக்கப்படாமல் இருந்தால் இதய நோய், ஆஸ்டியோபோரோசிஸ், இரண்டாம் வகை நீரிழிவு, ஒற்றைத் தலைவலி, அல்சைமர் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயங்களும் உள்ளன. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்னீசியம் அதிகம் இருக்கக்கூடிய வைட்டமின் மாத்திரைகள், கீரைகள், பழங்கள், அவகோடா, அரிசி, தயிர், பாதாம், முந்திரி, கடலை உருளைக்கிழங்கு போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் மக்னீசியத்தினை அதிகப்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kokila

Next Post

வெங்காயத்தை இவர்கள் சாப்பிட வேண்டாம்! பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் ஆபத்து!

Tue Feb 7 , 2023
வெங்காயத்தை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. இருப்பினும், அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பல விதவிதமான உணவு வகைகள் மற்றும் பல்வேறு ருசி கொண்ட உணவு வகைகள் அதிகம் இருக்கிறது. தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் ஆர்வத்தில் மக்கள் கவனம் செலுத்த மறந்து விடுகின்றனர், இதனால் நமது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில், நமது உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். நம் […]

You May Like