எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி! மாணவிக்கு பள்ளி அறையில் பாலியல் தொல்லை..! பள்ளி தலைமை ஆசிரியை, அவரது கணவர் கைது..!

காண்போரை கண்ணீரில் ஆழ்த்திய கரடிகளின் புகைப்படம் – பருவநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் வனவிலங்குகள் !!!

மீன்கள் கிடைக்காததால் இளைத்து போய் எலும்பும், தோலுமாக காட்சியளிக்கும் தாய் மற்றும் குட்டி கிரிஸ்லி கரடிகளின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

19257654 7532501 He said he saw the mother bear and her two cubs a couple of week a 1 1570126046798

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் முதற்கொண்டு, பலதரப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உலக நாடுகளின் தலைவர்கள் ஈடுபட வலியுறுத்தி, 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக ஐ.நாவில் உலக தலைவர்களுக்கு எதிராக எச்சரிக்கை உரையாற்றிய, சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா சமூக வலைத்தளங்களில் வைரலானார். இந்நிலையில் பருவநிலை மாற்றத்தின் கொடூரத்தை நமது கண்முன்னே நிறுத்தும் வகையில் இணையதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

19258378 7532501 image a 4 1570113971847

அது, இளைத்து எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் தாய் கிரிஸ்லி கரடி, ஒன்று தனது 2 கரடி குட்டிகளுடன் உணவு தேடி அலையும் பரிதாப புகைப்படம் தான். இந்த பருவத்தில் , கிரிஸ்லின் கரடிகளின் பிரதான உணவான சாலமன் மீன்கள் கனடாவில் அதிக அளவில் காணப்படுவது வழக்கம். ஆனால் பிரிட்டீஸ் கொலம்பியாவில் உள்ள நைட் இன்லெட் (Knight Inlet) என்ற இடத்தில் உணவு கிடைக்காமல் சுற்றித்திரியும் கிரிஸ்லி கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

19260566 7532501 image a 24 1570116883621

பருவநிலை மாற்றத்தால் அப்பகுதியில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சாலமன் மீன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.இந்நிலையில் அப்பகுதியில் போட்டோ சூட்டிற்காக சென்றிருந்த ரோல்ஃப் ஹிக்கர் (Rolf Hicker) என்ற புகைப்பட கலைஞர் பசியால் செத்து மடியும் நிலையில் உள்ள தனது குட்டிகளுக்கு, தாய் கிரிஸ்லி கரடி உணவு தேடி அலையும் காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அதிர்ச்சி அடைந்ததற்கு காரணம் கரடிகள் தன்னை தாக்கிவிடுமோ என்ற அச்சமல்ல, நன்றாக வளர்ந்த ஆணை விட இருமடங்கு பெரிதாகவும், கொழு கொழுப்பாகவும் காட்சியளிக்கும் கிரிஸ்லி கரடிகள், பல நாள் பட்டினியால் பரிதபாக காட்சியளித்ததே ஆகும்.

19260620 7532501 image a 27 1570116989517

இந்த காட்சியைக் கண்ட ஹிக்கர் உடனடியாக அதனை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதற்கு அவர் கூறும் காரணம் “பல அழகான வனவிலங்குகளையும், இயற்கை வனப்பின் அழகையும் படங்களாக எடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அதற்கு முன்பு இந்த புகைப்படத்தை உங்களிடம் காட்ட விரும்புகிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் காலநிலை உலகின் சராசரி அளவை விட இருமடங்கு வேகமாக வெப்படைந்து வருவதாகவும், அதன் தாக்கத்தால் தான் சால்மன் மீன்களின் உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அந்நாட்டின் மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

இனி இல்லை காற்று மாசு; அறிமுகமானது பசுமை பட்டாசு

Sun Oct 6 , 2019
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பசுமை பட்டாசுகளை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்துவைத்தார். பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு மற்றும் சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதே நேரத்தில், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில […]
Green Crackers Harsha Vardhan 2019 10 05 1

You May Like