அடுத்த 3நாட்களுக்கு விடாது கனமழை!!

தமிழகத்தில் அடுத்த வரும் 5ம் தேதி வரை கனமழை விடாது கொட்டித்தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. இந்த மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அதே போல படிப்படியாக அதிகரித்து மழை கொட்டித்தீர்க்கின்றது. தொடர்ந்து மேலும் 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்து வரும் பலத்த மழையால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கனமழையால் பொதுமக்கள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள தகவல்படி தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

4ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

5ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Next Post

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்..? திமுக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!

Wed Nov 2 , 2022
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 2021இல் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக முக.ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது, பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. […]

You May Like