சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை…! பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்…!

cyclone Alert 2025

வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 280 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 380 கிமீ தொலைவிலும் டிட்வா புயல் நிலை கொண்டுள்ளது. இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். புயல் நகர்ந்து வரும்போது காலையில், சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவிலும், மாலையில் 25 கிமீ தொலைவிலும் நிலவக்கூடும்.

இதன் காரணமாக இன்று வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்திலும், இடையிடையே 75 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இதர வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்திலும், இடையிடையே 80 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

இன்று திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை வரை அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்திலும், டிச.1-ம் தேதி அதிகபட்சமாக 65 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து SIR படிவம் கொடுத்தால் போதும்...! தேர்தல் ஆணையம் உத்தரவு...!

Sun Nov 30 , 2025
தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி கொடுக்காமல் இருக்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்காளர்களாக இருப்பவர்களை நீக்கும் நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர […]
special revision voter list

You May Like