தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வடதமிழக கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சாலைக்கு வந்த சசிகலா புஷ்பாவின் பொருட்கள்..!! வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!! பரபரப்பு

Fri Oct 28 , 2022
சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியேற்றிவிட்டு, வீட்டுக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா புஷ்பா தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் மேயராக 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இருந்து வந்தார். இதையடுத்து, ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், மாநிலங்களவையில் ஜெயலலிதா என்னை அடித்துவிட்டார் என்று சசிகலா புஷ்பா கூறிய சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் […]
சாலைக்கு வந்த சசிகலா புஷ்பாவின் பொருட்கள்..!! வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்..!! பரபரப்பு

You May Like