சென்னை கனமழை: சாலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்த பெண் மீட்பு…

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு ! வெள்ள பாதிப்பு வராது…ஆட்சியர் உறுதி!!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வெளியேறிக்கொண்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் தண்ணீர் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதான ஏரியாக விளங்குகின்றது. பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த 2 நாட்களில் நீர் வரத்து 2000 கன அடியாக உள்ளது மொத்த கொள்ளவு 3,400 மி.க.அடி. இதில் 2,692 மி.க.அடிதண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 21 அடியில் நீர்மட்டம் 19 அடியை நெருங்கிவிட்டது. ஏரியில் 18.42 அடி நீர் உள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் புழல் ஏரிக்கு மேலும் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே இன்று மாலை முதல் முதல்கட்டமாக 100 கனஅடி உபரிநீர்திறக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் நீர் மட்டம் 90 மில்லியன் கன அடி உயர்ந்துள்ளது.

2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது செம்பரம்பாக்கம் ஏரி இரவோடு இரவாக திறக்கப்பட்டதால் ஏரி நீர் செல்லும் வழித்தடங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்து பெரும் இழப்பை ஏற்படுத்தியது. உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுகின்றது என்ற செய்தி மக்களை அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 14 ஏரிகள் கிடுகிடுவென நிரம்பி வருகின்றது. இதனால் உபரிநீர் திறக்கப்பட்டு வருகின்றது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 442 கன அடி நீர் இருந்த நிலையில் இந்த ஆண்டு 2000 கன அடிக்குமேல் உள்ளது. வரத்து அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூறுகையில், ’’ தொடர்ந்து 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீர் திரம்பி வருகின்றது. மழை வெள்ளத்தால் பாதிப்புகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கண்காணிக்க 21 மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது. 71இடங்கள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள். 13 இடங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே மழை நீர் வடிந்து செல்வதற்கு போதிய வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு பிரச்சனையும் வராது’’ என தெரிவித்தார்.

Next Post

’’ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை’’… கூடுதல் ஏற்பாடுகளை செய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

Wed Nov 2 , 2022
ஒரு நாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிப்பதாகவும் கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி மக்கள் நீதிமய்யம் கட்சி அரசிடம் வலியுறுத்தி உள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதாலும், வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டதாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்துவாங்குகின்றது. 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என கூறப்படும் நிலையில் ஒரு நாள் மழைக்கே இங்கு சென்னை தத்தளிக்கின்றது. இது தொடர்பாக மக்கள் நீதி […]
அரசியலில் திடீர் திருப்பம்..!! காங்கிரஸ் உடன் கைகோர்க்கும் கமல்ஹாசன்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

You May Like