அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

மிக அதிக கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கனமழை

வடகிழக்கு பருவமழை நேற்று முன் தினம் முதல் தொடங்கிய நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது. அந்த வகையில், சென்னையில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்குப் பருவமழை நேற்று முதல் தொடங்கியது. வடகிழக்குப் பருவமழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில், தமிழகம் 60% மழையைப் பெறும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வடதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

சிஎஸ்கே அணியால் மொத்த பிளே-ஆஃப்பும் மாறியது..! மற்ற அணிகளின் பிளே-ஆஃப் வாய்ப்பை நிர்ணயிக்கும் சிஎஸ்கே..!

Fri Oct 30 , 2020
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் வாய்ப்புகள் மாறி உள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்னும் சில லீக் சுற்றுப் போட்டிகளே மீதமுள்ள நிலையில் பிளே-ஆஃப் குறித்த பரபரப்பு எழுந்துள்ளது. அதில் குறிப்பாக, நேற்றைய சிஎஸ்கே – கொல்கத்தா இடையேயான போட்டி முக்கிய பங்கு வகித்தது. சிஎஸ்கே அணி ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு அதிகரிக்க முடியும். […]
அடுத்த ஆண்டு கெத்தா எழுந்து வருவோம்..! கேப்டன் தோனி

You May Like