கஷ்மீரில் கடும் பனிப்பொழிவு!… நண்பன் படப்பாணியில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்!… தாயும் சேயும் நலம்!

பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில், நண்பன் பட பாணியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் அழைப்பு மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மருத்துவர்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முகாஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மாண்டியன், கேரனைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவ வலியால் அவதிபட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அப் பெண் அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள், பிரசவத்திற்காக குப்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் அங்கு நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக குப்வாரா செல்லும் சாலை தடைப்பட்டது.

இது தொடர்பாக Kralpora துணை மாவட்ட மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணரான Dr Parvaiz கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கர்ப்பிணியை, குப்வாராவுக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் சேவையை ஏற்பாடு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், கடுமையான பனிப்பொழிவு காரணமாக, ஹெலிகாப்டர் சேவை சாத்தியமில்லாததால், கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில், கரேனில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களை Whatsapp அழைப்பில் வருமாறு மருத்துவர் Parvaiz கேட்டுக் கொண்டார். அதன்படி, குப்வாராவில் உள்ள மகப்பேறு மருத்துவர், கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் செய்ய கரனில் உள்ள மருத்துவர் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு வழிகாட்டினார், அதன் பிறகு 6 மணி நேரம் கழித்து அந்தப் பெண் ஓர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மேலும், இந்த அனுபவம் எனக்கு வித்தியாசமாக இருந்ததாகவும், கடவுளின் அருளால் கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை பிரசவம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், தற்போது குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

Kokila

Next Post

அசத்தும் தமிழக அரசு...! ரேஷன் கடைகளில் 2 கிலோ சிறு தானியம்‌...! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Mon Feb 13 , 2023
தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின்‌ கீழ்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில்‌ ஒரு குடும்பத்துக்கு மாதம்‌ ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யும்‌ பொருட்டு தருமபுரி மாவட்டத்தின்‌ மாதாந்திர தேவை 440 மெட்ரிக்‌ டன்‌ எனவும்‌, இதற்காக ராகி சிறு தானியத்தை சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல்‌ செய்திட தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிப கழகத்திற்கு […]

You May Like