ராஞ்சியில் ஹேமந்த் சோரன் சட்டவிரோதமாக 12 நிலங்களை கையகப்படுத்தியுள்ளார்!… அமலாக்கத்துறை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஞ்சியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் 12 அடுத்தடுத்த நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தி வைத்திருந்தார் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜனவரி 28, 29-ம் தேதிகளில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, ராஞ்சியில் விசாரணை நடத்துவதற்காக நேற்று பிற்பகலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர். ஆனால், ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவ படையினர், போலீஸார் குவிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணி முதல் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, நேற்றிரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் PMLA நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அப்போது, ஹேமந்த் சோரன் சட்டவிரோதமாக கையகப்படுத்திய மற்றும் வைத்திருக்கும் சொத்துக்கள் உட்பட பல்வேறு சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தவும் அதனை மறைக்க பிற நபர்களுடன் சதித்திட்டங்களைத் தீட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது.

ஹேமந்த் சோரனுக்கு உதவிய வருவாய்த் துறையில் சப்-இன்ஸ்பெக்டரான பானு பிரதாப் பிரசாத்தின் தொலைப்பேசியில் இருந்து சொத்து விவரங்கள் எடுக்கப்பட்டதாகவும், ராஞ்சியில் 8.5 ஏக்கர் பரப்பளவில் 12 அடுத்தடுத்த நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்ததாகவும் மேலும், சோரனின் டெல்லி வீட்டில் நடந்த சோதனையின்போது, ரூ.36.34 லட்சத்தை மீட்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

1newsnationuser3

Next Post

வீடுகளில் சோலார் அமைப்பதால் இவ்வளவு பணத்தை சேமிக்க முடியுமா..? குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர்..!!

Fri Feb 2 , 2024
மத்திய அரசின் சோலார் மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2024-2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், இதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தனது பட்ஜெட் உரையின் போது பல பெரிய திட்டங்கள் மற்றும் புதிய […]

You May Like