ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! வீடு தேடி வந்து பெண்ணை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபர்..! பட்டபகலில் நடந்த பரபரப்பு..! பிரபல இயக்குநருக்கு மியூசிக் போட்ட நடிகர் விவேக்! கண்ணான கண்னே – வைரல் வீடியோ உள்ளே நடிகர் ரஜினியின் அதிரடியான அடுத்தக்கட்ட நகர்வு ! உற்சாகத்தில் ரசிகர்கள் – தீபாவளிக்கு என்ட்ரி சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கிவிட்டதாம்… மருத்துவமனை தகவல் "எங்களுக்கு இது தான் வேலையா.. படம் வந்த பிறகு பாருங்க" சீமானுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி தலையில் பைக்கை சுமந்து பேருந்தில் ஏற்றும் நபர்.. “வறுமையை ஆபாசமாக பெருமைப்படுத்தும் அறிவுஜீவிகள்..” #Video நடிகர் சித்தார்த்துக்கு திருமணம் – குவியும் வாழ்த்துகள் ஆதார் எண், ஓடிபி போன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்; அரசு பலாத்காரம் செய்தது அவர் தான்.. ஆன குழந்தைக்கு அப்பா அவரு இல்ல..! சிறை தண்டனையின் போது வெளியான அதிர்ச்சி..! மோடி இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்.. திரிணாமூல் காங்., எம்.பி சவால்.. "வெற்றி பெற்றால் அதிமுக-பாஜக சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும்.." சி.டி.ரவியின் பேச்சால் அதிமுக அதிர்ச்சி..! "நீயா நானா கோபிநாத்" வீட்டில் மற்றுமொரு பிரபலம்..! இந்த நடிகரா அவர்..? “ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இதை மட்டும் ரத்து செய்தால்.. என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்..” அதிமுக முன்னாள் எம்.பி பேச்சு.. பள்ளி மாணவிகளின் பாலியல் வழக்கு..! அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்..

ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் ‘மூலிகை மைசூர்பா’ குறித்து கோவை ஸ்வீட் கடை உரிமையாளர் வழங்கி வரும் நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூலிகை மைசூர்பா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து அதனை மனிதர்களுக்கு சோதனை செய்துள்ளனர். கொரோனாவை முழுமையாக குணப்படுத்தும் தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா குறித்து கோவையை சேர்ந்த ஸ்வீட் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் நெல்லை லாலா ஸ்வீட் என்ற கடை இயங்கி வருகிறது. அக்கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம் தான் தற்போது மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று நோட்டீஸ் விநியோகித்து வருகிறார். 19 வகையான மூலிகைகளை பயன்படுத்தி இந்த மூலிகை மைசூர்பாவை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த மைசூர்பாவை சாப்பிட்டுபவர்களுக்கு கொரோனா நோய் ஒரே நாளில் குணமாகும் என்று கூறிய அவர், கடந்த 3 மாதமாக அதனை விற்பனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

herbal

மேலும் சின்னியம்பாளையம், ஆர் ஜி புதூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு இலவசமாக இந்த மூலிகை மைசூர்பாவை அளித்ததாகவும், அவர்கள் ஓரிரு நாட்களில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமானதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி, சித்த மருத்துவத்தில் தனது தாத்தா கற்றுக் கொடுத்த சில வழிமுறைகளை பின்பற்றி இந்த மூலிகை மைசூர்பா தயார் செய்வதாக கூறிய அவர், இதில் உள்ள 19 வகையான மூலிகை பொருட்கள் உடனடியாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் இருக்கக்கூடிய கொரோனா தொற்றை அழிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மூலிகை மைசூர்பாவை ஒரு நாளைக்கு 4 துண்டுகள் சாப்பிட்டு வந்தால் விரைவில் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றும் அப்படி சாப்பிட்டு வந்த பலர், இந்த நோயிலிருந்து விடுபட்டதாகவும், எந்த பக்க விளைவும் இல்லை எனவும் கூறினார். மேலும் மத்திய அரசு விரும்பினால் இந்த மூலிகை மைசூர்பாவின் ஃபார்முலாவை, எவ்வித பணம், பொருள் எதிர்பார்ப்பின்றி இலவசமாக வழங்க தயாராக உள்ளதாகவும் ஸ்ரீதர் தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

“பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்..

Tue Jul 7 , 2020
திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூரில் வசிக்கும் பெரியசாமி என்பவரின் மகள், 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் குப்பை கொட்டுவதற்காக வீட்டை விட்டு வெளிறிய சிறுமி, வெகு நேரமாகியும் திரும்பாததால், பதறிப்போன பெற்றோர்கள் சிறுமியை தேடியுள்ளனர். இந்த சூழலில், அங்குள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். […]
திருச்சியில்

You May Like