செம்பருத்தி பூவில் அத்தனையும் நன்மைகள்தான்!

செம்பருத்தி பூ இதழ்கள் தலை முடிக்கு மட்டுமின்றி எண்ணற்ற உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. இதனால் அழகிற்காக வளர்க்கப்படும் மலர் மட்டுமின்றி ஒரு மருத்துவ தாவரம் என கூறலாம்.

செம்பருத்தி பூவின் சாறு எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.

மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது.

சிறுநீரக

செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்/

உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும்.

செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்

Next Post

சாலைகளில் பள்ளம்... அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிரடி உத்தரவு...!

Wed Oct 26 , 2022
பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் ‌‌. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில்; பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர்‌ வடிகால்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில்‌ […]
’தேசியக்கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு’..! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..!

You May Like