உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

சென்னையில் உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்…

ஆகஸ்ட் மாதத்தை விட நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் …!

Porur

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. காலி குடங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலைகளில் மணிக்கணக்கில் காத்திருந்த அவலமும் அரங்கேறியது. பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தண்ணீருக்காக ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்தனர். ஒரு லாரி தண்ணீர் 4000 ரூபாய் வரையெல்லாம் கொடுத்து பலர் வாங்கி உபயோகித்தனர். சென்னை முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துபோனது. தண்ணீர் மோட்டார் எல்லாம் பல மாதங்களாக செயலில் இல்லாமல் துறுபிடித்து போனது.

சென்னையை வாழவைத்த மழை :

dc Cover 52ativoce7hicsrijud8rov0p3 20160831064424.Medi

கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி மக்கள் தவித்தனர். இந்நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையை மழை பலமுறை அரவணைத்தது. மே, ஜூன் மாதங்களில் தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக பொழியாமல் இருந்த மழை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பலமுறை ஆக்ரோஷமாக சென்னையை நனைத்தது. அதன்பலனாக இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம் :

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சென்னை மாநகராட்சி நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு நடத்தியது. அதில் கோடம்பாக்கம் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் 8.1 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர் மட்டம், தற்போது 7.39 மீட்டராக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல தேனாம்பேட்டையில் 5.98 மீட்டராகவும், ராயபுரத்தில் 7.22 மீட்டராகவும், அம்பத்தூரில் 7.49 மீட்டராகவும், அண்ணாநகரில் 5.81 மீட்டராகவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தை ஒப்பிட்டு பார்க்கையில் அதிகம். குறிப்பாக திரு.வி.க., நகரில் 8.26 மீட்டரில் இருந்த நிலத்தடிநீர் மட்டம், தற்போது 5.74 அளவாக உயர்வு பெற்றுள்ளது. கோடை காலத்தில் இந்த பகுதி மக்கள் தண்ணீருக்காக மிகவும் தவித்தனர். திருவொற்றியூரில் 4.53 மீட்டரும், சோழிங்கநல்லூரில் 4.52 மீட்டரும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதேபோல் தண்டையார் பேட்டை, மாதவரம், மணலி, ஆலந்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

மழை நீர் உயிர் நீர் ;

75e61133e39bb089b8a22605d6bd1cd2

மழை நீரை சேமிப்பதனால் ஏற்படும் நன்மைகள் சொல்லி மாளாது. அனைவரும் வீட்டில் கட்டாயம் மழை நீர் சேமிப்பை தொடங்க வேண்டும். மழை நீர் வெறும் தண்ணீர் மட்டும் அல்ல. அது நம் எதிர்காலம். அடுத்த கோடை காலத்தில் மீண்டும் கையில் காலி குடங்களுடன் அலைய வேண்டாம் என்றால் இன்றே மழை நீரை சேமித்திடுங்கள்.

Newsnation_Admin

Next Post

சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் இயக்குநர் சிவா…! சன் பிக்சர்ஸ் கையில் தலைவர் 168…!

Fri Oct 11 , 2019
சன் பிக்சர்ஸ் இதுவரை ரஜினிகாந்தின் எந்திரன் மற்றும் பேட்ட படத்தை வெளியிட்டுள்ளது. இரண்டு படங்களுமே வசூலில் மாஸ் காட்டியது. பேட்ட படத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் ரஜினியை பாட்ஷாவாக பார்த்தனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் ரஜினியின் 168 வது படத்தையும் சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்க உள்ளார். இதனை டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. சிவா அஜித்தை வைத்து வீரம், விவேகம், விஸ்வாசம் ஆகிய […]
3 image temp 1

You May Like