பல்வேறு மாநிலங்களின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை…..!

பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தி வருகின்றார்.


அந்த வகையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட உள்துறை அமைச்சக அதிகாரிகள் தேசிய பேரிடர், மேலாண்மை ஆணையம் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றுக் கொண்டுள்ளனர்.

பேரிடர் மேலாண்மையின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்வதற்கான தயார் நிலை தொடர்பாக கூட்டத்தில் பேசப்பட இருக்கிறது. பேரிடர் மேலாண்மையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்படுகின்றது.

தற்போது அரபிக் கடலில் பிபர்ஜாய் புயல் ஏற்பட்டிருக்கின்ற நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதனை அடுத்து பிபர்ஜாய் புயல் குறித்து குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் மற்றும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உள்துறை அமைச்சர் என்று பிற்பகலில் ஆலோசனையின் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Next Post

தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!! பெரும் பரபரப்பு..!!

Tue Jun 13 , 2023
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது. மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் […]
Secretariat

You May Like