#Holiday..!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா, பெரிய கோவில் வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி வருகிற 2ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று (நவ.3) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று (நவ.3) தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

#Holiday..!! இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழா வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், சதய விழா நாளான 3ஆம் தேதி (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

காதலிக்காத ஆத்திரத்தில் பிளஸ்1 மாணவியை நடுரோட்டில் வைத்து..!! ஓடிவந்த மக்கள்..!! ஓட்டம் பிடித்த வாலிபர்..!!

Thu Nov 3 , 2022
பவானிசாகர் பகுதியில் காதலிக்காத ஆத்திரத்தில் பிளஸ்1 மாணவியை நடுரோட்டில் வழிமறித்து கழுத்தை அறுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், திடீரென கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி வாலிபரிடம் இருந்து தப்பிக்க போராடியபடி அலறினார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். […]

You May Like