மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு…

தமிழ்நாட்டில் நவம்பர் 4ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மழை காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளான நவம்பர் 1ம் தேதியன்று கன்னியாகுமரி மக்களால் கொண்டாடப்பட்டு வருவதால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

1Newsnation_Admin

Next Post

செம வாய்ப்பு...! துணைத்‌ தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..‌.! ஆட்சியர் அறிவிப்பு...

Tue Nov 1 , 2022
அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள்‌ சேலம்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பதிவு செய்து பயன்பெறலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌ சேலத்தில்‌ 2014 முதல்‌ சேர்க்கை செய்யப்பட்டு தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு நவம்பர்‌ 2022-ல்‌ நடைபெற உள்ளது. இத்தேர்வில்‌ 2014 முதல்‌ 2017 வரை சேர்க்கை செய்யப்பட்ட பருவமுறை பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ […]

You May Like