காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்..! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்..! CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்..

வீட்டுக் கடன், வாகனக் கடன்களின் வட்டி மேலும் குறைய வாய்ப்பு.. வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு..

அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (ரிசர்வ் வங்கி) கடன் வாங்குகின்றன. அவை ‘ரெப்போ வீதம்’ என்று அழைக்கப்படுகின்றன. இது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியால் மதிப்பாய்வு செய்யப்பட்டு திருத்தப்படலாம். இந்த ரெப்போ வீதத்தின் அடிப்படையில், வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களை நிர்ணயிக்கின்றன.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்களுக்கான மிதக்கும் வட்டி விகிதங்கள் இந்த ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. வீட்டுக் கடன் வாங்கியவர்கள் தற்போது, கடன் அடிப்படையிலான விகிதத்தில் (Marginal Cost of Lending based Rate- MCLR) இருந்தால், ரெப்போ வீதத்தின் முழு பயனும், வங்கிகளால் கடன் வாங்குபவர்களுக்கு வழங்கப்படாமல் போகலாம். மேலும் ஒரு கால தாமதமும் இருக்கலாம்.

மறுபுறம், கடன் வாங்கியவர்கள் கடந்த அக்டோபரில் நடைமுறைக்கு வந்த ரெப்போவுடன் இணைக்கப்பட்ட கடன் விகிதத்தில் (Repo Linked Lending Rate -RLLR) இருந்தால், முழு ரெப்போ வீதக் குறைப்பு கடன் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரிசெய்ய பண்டிகை (Festive) காலத்திற்கு முன்தாகவே, பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து தங்கள் கடன்களுக்கான வட்டித்தொகையை குறைத்து வருகின்றன, இதனால் பொருளாதாரம் மந்தநிலையில் தேவை அதிகரிக்கும்.

HOME LOAN HIKE1200X800 2

ஏற்கனவே UCO Bank, யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவற்றை தொடர்ந்து தற்போது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (Central Bank of India) இப்போது MCLR-யை 0.05 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த விலக்கு அனைத்து வகையான பதவிக் காலத்தின் கடன்களிலும் கிடைக்கும். புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

முன்னதாக, கடந்த வாரம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவை MCLR-ஐ முறையே 0.05 சதவீதம், 0.10 சதவீதம் மற்றும் 0.10 சதவீதம் என குறைத்துள்ளன. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களின் வட்டி குறைய வாய்ப்புள்ளது.

707795 loan

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இது ஒரு வருடத்திற்கு MCLR-யை 7.15 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதமாகக் குறைத்துள்ளது. 1 நாள் மற்றும் 1 மாதத்தின் MCLR 6.55 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது முன்பு 6.60 சதவீதமாக இருந்தது.

ஊரடங்கு காரணமாக வங்கிகளின் கடன் தேவையை அதிகரிக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கி இந்த வணிக ஆண்டில் இரண்டு முறை முக்கிய வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. தற்போது, ​​பாலிசி ரெப்போ (Repo Rate) வீதம் 4 சதவீதமும், தலைகீழ் ரெப்போ (Reverse Repo Rate) வீதம் 3.35 சதவீதமும், வங்கி வீதம் (Bank Rate) 4.25 சதவீதமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

பிக்பாஸ் தமிழ் அப்டேட்.. போட்டியாளர்கள் இவர்கள் தானாம்.. வெளியானது முழு பட்டியல்..

Wed Sep 16 , 2020
கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு ஜூன் மாதமும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கப்படும். ஆனால் இம்முறை கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்பு பணிகளை போல பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியும் தள்ளிப்போனது. எனினும் தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. சமீபத்தில் வெளியான பிக்பாஸ் ப்ரொமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது அதில் கலந்து கொள்ள உள்ளவர்கள் […]
இது என்னடா அட்மினுக்கு வந்த சோதனை..! ரசிகர்களை கவர்ந்த விஜய் டிவியின் வாட்ஸ் அப் சாட்..!

You May Like