சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

ஹானரின் அடுத்த பட்ஜெட் போன்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

இங்கிலாந்தில் சத்தமில்லாமல் ஹானர் நிறுவனம் தனது 8எஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது.


ஹானர் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், தற்போது ஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ரஷ்யாவில் வெளியான 8எஸ் மாடலின் அப்டேடட் வெர்சன்.

01 min 1

ஹானர் 8 எஸ் 2020 ஸ்மார்ட்போன் 5.71 இன்ச் எச்டி+ டியூட்ராப் டிஸ்ப்ளே மற்றும் 1520 x 720 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரெசல்யூஷனைக் கொண்டுள்ளது. இந்த ஹானர் 8 எஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 SoC ஆல் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலமாக 512 ஜிபி வரை விரிவாக்கம் செய்துக்கொள்ளலாம்.

கேமராவைப் பொறுத்தவரை 13மெகாபிக்சல்கள் கொண்ட ஒரே ஒரு பின்புறக் கேமராவை மட்டுமே கொண்டுள்ளது. முன்புறம் 5 மெகாபிக்சல்களுடன் ஒரு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், கூகுள் மொபைல் சர்வீசஸ் (ஜிஎம்எஸ்) ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான EMUI 9.0 கொண்டு இயங்குகிறது.

கனெக்டிவிட்டியை பொருத்தளவில் 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி 2.0 மற்றும் கைரேகை சென்சார் ஆகியவை அடங்கும். இதில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை ஹானர் நிறுவனம் சத்தமில்லாமல் இங்கிலாந்தில் தற்போது வெளியிட்டுள்ளது. விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் தோரயாமாக ரூ.9,600க்கு விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

1newsnationuser3

Next Post

13 வருடம்...100 பெண்கள்...1400 வீடியோக்கள்... சிக்கியது எப்போது?

Mon Jun 8 , 2020
கடந்த 2003 ஆண்டிலிருந்து தொடர்ந்து பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வந்த சிங்கப்பூரை சேர்ந்த 35 வயது நபருக்கு 2 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த நபர் அங்குள்ள பல பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை குளியலறை, உடை மாற்றும் அறை, கழிவறை ஆகிய இடங்களில் ஆபாசமாக வீடியோ எடுத்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு தன்னுடன் வேலை பார்த்து வந்த சக பெண் […]
Image by Kat Jayne.

You May Like