கொரோனா சிகிச்சைக்காக டெல்லிவாசிகளுக்கென 10ஆயிரம் படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.46 லட்சமாக உள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லையென புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில், டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே படுக்கைகள் ஒதுக்கப்படும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
அதற்கேற்ப தற்போது 10 ஆயிரம் படுக்கைகள் டெல்லி வாசிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை கொண்ட மருத்துவமனைகளை அனைவரும் பயன்படுத்தலாம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.