'Sorry to all' சுற்றில் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி..! காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்..! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்..! CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..!

வீட்டில் எத்தனை வாசல் இருந்தால் நல்லது… தலைவாசல் எந்த திசை நோக்கி இருக்க வேண்டும்…

சொந்தமாக வீடு என்பது சாமானிய மக்கள் ஒவ்வொருவரின் கனவு என்றே சொல்லலாம் அதை நாம் நிறைவேற்றும் பொது வீட்டிற்கு முக்கியான ஒன்று வாசல் வைப்பது அதுவும் எத்தனை வாசல் வைப்பது மேலும் தலை வாசல் எந்த திசையில் வைத்தால் நன்மை தரும் என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கபப்டுகிறது. வாஸ்து சாஸ்திரத்தைப் பொறுத்தவரை இந்த ராசிக்காரர்களுக்கு இந்தத் திசையில்தான் வாசல் இருக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. நல்லவிதமான வாஸ்து அமைப்புள்ள வீட்டில் எந்த ராசிக்காரரும் வசிக்கலாம். தவறான வாசல் உள்ள வீட்டில் எவ்வளவு நல்ல யோகமான ஜாதகத்தில் ஒருவர் பிறந்திருந்தாலும் அவஸ்தைப்பட வேண்டியே இருக்கும் என்பதே உண்மை.


வீடு கட்டும்போது மதிற் சுவருக்கும் வீடு அமையும் இடத்துக்கும் இடம் ஒதுக்கும்போது, கிழக்கில் இடம் அதிகமாகவும் மேற்கில் இடம் குறைவாகவும், தெற்கில் இடம் குறைவாகவும் வடக்கில் இடம் அதிகமாகவும் இருக்கும்விதமாக அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால்தான் தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு பள்ளமாகவும் இருக்கும் விதமாக அமைக்க முடியும். தென்மேற்கு என்பது ‘குபேர மூலை’. வடகிழக்கு என்பது ‘ஈசான்ய மூலை’. குபேர மூலை உயரமாகவும் ஈசான்ய மூலை பள்ளமாகவும் இருக்க வேண்டும். இப்படி அமைப்பதுதான் முறையான வாஸ்து.

house2

அதன்படி வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. காற்று வந்து செல்வது தான் வீட்டிற்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நலம். தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம். தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் 100% தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது.

gate

ஒரு கட்டடம் எந்தத் திசையை நோக்கியிருந்தாலும், அதன் தலைவாசலை சிறப்பாக அமைப்பது அவசியம். வடக்குப் பார்த்த கட்டடத்துக்குத் தலைவாசல் வடக்குநோக்கி கிழக்கு திசையை ஒட்டியவாறு அமைக்க வேண்டும். கிழக்கு பார்த்த கட்டடத்துக்குத் தலைவாசல் கிழக்கு திசையில் வடக்கு திசையை ஒட்டியவாறு அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கட்டடத்துக்குத் தலைவாசல் தெற்கு திசையில் கிழக்கு திசையை ஒட்டியவாறு அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கட்டடத்துக்குத் தலைவாசல் மேற்கு திசையில் வடக்கு திசையை ஒட்டியவாறு அமைக்க வேண்டும். ஒரு வீட்டுக்கோ, தொழில் நிறுவனத்துக்கோ அமைக்கப்படும் வாசல்கள் ஒன்று, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு… என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைக்க வேண்டும். மேலும் கட்டடத்துக்குள் போடப்படும் அறைகளின் வாசல்களும் மேற்கூறியபடியே அமைக்கப்பட வேண்டும்.

Newsnation_Admin

Next Post

அரசின் இந்த திட்டத்தின் மூலம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம்... அதுவும் வெறும் 1000 ரூபாயில் இருந்தே.. முழு விவரம் இதோ..

Sat Sep 5 , 2020
கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொகை இரட்டிப்பாகும். இது முழுக்க முழுக்க அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால், இங்கு எந்த ஆபத்தும் இல்லை, உங்கள் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது. நீண்ட கால முதலீடுகளைச் செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது. நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் பெரிய வங்கிகளிலும் இந்த திட்டம் உள்ளது […]
1000

You May Like