சிகரெட் பிடித்து கெட்டுபோன நுரையீரலை 3 நாட்களில் சுத்தம் செய்யலாம்.! எப்படி தெரியுமா .!?

பொதுவாக பலருக்கும் நுரையீரலில் நச்சுக்கள் நிறைந்து சுவாசிக்க கஷ்டமாக இருந்து வரும். புகை பிடிப்பது, புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பது, சுற்றுச்சூழல் மாசு நிறைந்த இடத்தில் இருப்பது போன்ற காரணங்களினால் நுரையீரலில் நச்சுக்கள் தேங்கி பலருக்கும் அலர்ஜியாகும். வீட்டிலேயே வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

நுரையீரலை சுத்தப்படுத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பால் சம்பந்தப்பட்ட பொருட்களை உண்பதை நிறுத்தி விட வேண்டும். டீ, காபி கூட கண்டிப்பாக குடிக்க கூடாது. மேலும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக சுக்கு, மிளகு, திப்பிலி, புதினா, இஞ்சி போன்ற மூலிகைகளினாலான தேநீர் அருந்திவிட்டு தூங்க வேண்டும்.

நுரையீரலை சுத்தப்படுத்தும் வழிமுறை: முதல் நாளில் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து 300 மிலி தண்ணீர் கலந்து சாப்பிடுவதற்கு முன்பாக காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் இடைவேளைக்கு பின் 300 மில்லி லிட்டர் அன்னாசி பழ சாறு அருந்த வேண்டும். இந்த பழ சாறுகளில் சர்க்கரையை கண்டிப்பாக கலக்கக்கூடாது.

மதிய உணவிற்கு முன்பு இரத்தத்தை சுத்தப்படுத்தும் கேரட் சாறு 300 மிலி, இரவு தூங்கப் போவதற்கு முன்பாக பொட்டாசியம் நிறைந்த பெர்ரி பழ வகைகளில் ஏதாவது ஒன்றை சாறாகவும் குடித்துவிட்டு தூங்கலாம். இவ்வாறு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக செய்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு நுரையீரலில் உள்ள நச்சுப் பொருட்கள் தானாகவே வெளியேறி சுவாசிக்க எளிதாக இருக்கும்.

1newsnationuser5

Next Post

தொலைத்தொடர்பு, ரயில் பாதுகாப்பு உள்ளிட்ட அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Fri Feb 9 , 2024
மொபைல் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் கவரேஜை கணிசமாக மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு அலைவரிசைகளில் பெரிய அளவிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அறிக்கைகளின்படி, திவால் நிலையில் உள்ள சில நிறுவனங்களின் அலைவரிசைகள் 2024 இல் காலாவதியாகிறது. அதன்படி, இந்தாண்டு காலாவதியாகவுள்ள அலைவரிசைகளும் ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரைத்தபடி, ரூ.96,317.65 கோடி […]

You May Like