நம் கைவிரல்களை வைத்து உடலில் உள்ள நோய்களை சரி செய்யலாம்.! எப்படி தெரியுமா.!

உடலில் ஏற்படும் நோய்களை நம் கைகளில் விரல்களை வைத்து சரி செய்யலாம் என்று அக்குபஞ்சர் மருத்துவர்கள் கூறிவருகின்றனர். அவை எப்படி சரி செய்யலாம் என்பதை குறித்து இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

1. கட்டை விரல் – கட்டை விரலின் நடுப்பகுதியில் நடுவிரலை வைத்து அழுத்தம் கொடுத்தால் மன அழுத்தம், மனப்பதட்டம் குறையும். இவ்வாறு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மனநிலையை கட்டுப்படுத்தி தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யலாம். கட்டைவிரல் மண்ணீரல் மற்றும் வயிற்றுப் பகுதியுடன் இணைப்பு உள்ளதாக கருதப்பட்டு வருகிறது.
2. ஆள்கட்டிவிரல் – சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புள்ள ஆள்காட்டி விரலில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் பயம் ஏற்படுவது குறையும். சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் சிறுநீர் அலர்ஜி ஏற்படாமல் பாதுகாக்கும்.
3. நடுவிரல் – கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்பு உள்ள நடுவிரலில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் பித்தப்பை கற்கள் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். தலைவலி ஏற்படும் போது நடு விரலில் அழுத்தம் கொடுத்தால் ரத்த ஓட்டம் அதிகமாகி தலைவலி உடனடியாக குணமடையும்.
4. மோதிர விரல் – நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ள மோதிர விரலில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் சுவாசக் கோளாறுகளை போக்கும். நரம்புகள் மற்றும் தசை வலிகளை சரி செய்யும். மேலும் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படாமல் இருக்கும்.
5. சுண்டு விரல் – மூளை மற்றும் இதயத்துடன் சம்பந்தப்பட்ட சுண்டுவிரலில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மூளையில் செயல்திறனை சீராக்கி கவனம், எண்ணம், சிந்தனை போன்றவற்றை ஒருங்கிணைக்கிறது.

1newsnationuser5

Next Post

ஆற்றில் நடக்கும் கொலைகள்..!! உடலை மீட்பதாக கூறி பணம் பறிப்பு..!! இயக்குனர் பாக்யராஜ் பகீர் வீடியோ..!!

Tue Feb 13 , 2024
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இறந்துள்ள நிலையில், இயக்குநர் பாக்யராஜ் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த சம்பவம் பரபரப்பை […]

You May Like