இப்போது அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு விட்டது. அரசு சார்ந்த வேலைகளும், சான்றிதழ்கள் பெறுவதும் கூட தற்போது ஆன்லைன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே வாங்க முடிகிறது. அந்த வகையில் ஓபிசி சான்றிதழ் தேவைப்படுவோர் ஆன்லைன் மூலம் எப்படி வின்னபிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பதாரரின் புகைப்படம்
ஆதார் அட்டை/ வாக்காளர் அட்டை/ குடும்ப அட்டை
சாதி சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில்https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
- நீங்கள் முதன்முறையாக இந்த இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள் என்றால், புதிய பயனர் என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- அதன்பிறகு User name மற்றும் password கிடைக்கும். அதைக் கொண்டு நீங்கள் மீண்டும் உள்நுழையவேண்டும்.
- பின்னர் Department Wise ஐ கிளிக் செய்து அதில் Revenue Department Option-ஐ கிளிக் செய்து OBC Certificate Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
- திரையில் தோன்றும் தகவலை படித்து Proceed ஐ கிளிக் செய்யவேண்டும்.
- நீங்கள் CAN Register செய்ய வேண்டும். அதற்கென இருக்கும் ஐகானை கிளிக் செய்யவும்.
- திறக்கப்படும் பக்கத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் நிரப்ப வேண்டும்.
- பின்னர் Submit பட்டணை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன்பிறகு நீங்கள் கொடுத்த தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு OTP வரும். அவற்றை உள்ளிட்டு சரிபார்க்கவேண்டும்.
- பின்னர் வெற்றிகரமாக CAN பதிவில், CAN எண் உருவாக்கப்படும்.
- அதன்பின் CAN எண்ணை உள்ளிட்டு அதில் கேட்கப்படும் விவரங்களைக் கொடுத்து Submit ஐ கிளிக் செய்ய வேண்டும்.
- அதன்பிறகு கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அப்போது ஒரு self declaration form கிடைக்கும். இவற்றை பிரிண்ட் செய்து நீங்கள் ஒப்பிடவேண்டும்.
- பின்னர் அவற்றையும் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
- அதன்பின்பு ஆன்லைன் மூலம் சான்றிதழுக்காக கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும்.
உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கான ஓபிசி சான்றிதழ் கிடைக்கும். சான்றிதழ் தயார் ஆனதும் உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு இரு குறுச் செய்திகள் வரும். அதன்பின் இதே இணையதளத்தில் நீங்கள் உங்களது சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.