சிரிக்க மறந்த மக்களுக்கு புன்னகை பயிற்சி மையம் ஒன்று அமைத்து எப்படிச் சிரிக்க வேண்டும் என்று பயிற்சி அளித்து வருகிறது.
கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஜப்பானியர்கள் முகக் கவசத்தை அணிந்து பொது இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இது கேட்க சாதனமாக இருந்தாலும் இது பிரச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளது. கோவிட் தொற்று அபாயம் குறைந்துள்ள நிலையில் மக்கள் முகக் கவசம் இன்றி வெளியிடங்களுக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், இயற்கையாகச் சிரிப்பது எப்படி என்பதை ஜப்பானியர்கள் மறந்துவிட்டனர். அதனால் சிரிப்புப் பயிற்சி வகுப்புகளுக்குப் பலரும் ஆர்வமாகச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
சமீபத்தில், டோக்கியோ கலைப் பள்ளியின் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் முகத்தில் கண்ணாடியைப் பிடித்து, தங்கள் வாயின் ஓரங்களை விரல்களால் மேல்நோக்கி நீட்டி எப்படிச் சிரிக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டனர். இந்த பயிற்சியை வானொலி பிரபலமாக இருந்து, தற்போது புன்னகை பயிற்சி மையத்தை நடத்தி, தொழில்முனைவோராக மாறியிருக்கும் கெய்கோ கவானோ என்பவர் தான். இந்த வகுப்பில் பங்கேற்ற 20 வயதான ஹிமாவாரி யோஷிதா “COVID இன் போது நான் என் முக தசைகளை அதிகம் பயன்படுத்தவில்லை, எனவே இது நல்ல உடற்பயிற்சி” என்று அவர் கூறினார்.
கவானோவின் நிறுவனமான Egaoiku – “ஸ்மைல் எஜுகேஷன்” – கடந்த ஆண்டை விட நான்கு மடங்குக்கும் அதிகமான தேவை என கூறுகிறது. இந்த வகுப்பிற்கு ஒரு மணிநேரம் நீடிக்கும் ஒரு பாடத்திற்கு 7,700 யென் ($55) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்திற்கு 4,500 ரூபாய். பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK நடத்திய கருத்துக் கணிப்பில் 55% ஜப்பானியர்கள் இன்றும் முக கவசங்களை அணிந்திருப்பதாகக் கூறியுள்ளனர். 8% பேர் மட்டுமே முக கவசங்களை அணிவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளனர். சொல்லப்போனால், வகுப்பிற்கு வந்த கலைப் பள்ளி மாணவர்களில் கால் பகுதியினர் பாடத்தின் போது முக கவசங்களை அணிந்திருந்தனர். இளைஞர்கள் முக கவசங்களுடன் வாழ்க்கைக்குப் பழகிவிட்டார்கள், கவானோ கூறினார்.