சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது? பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை! அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.! பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா சார்? திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்! தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி! பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது..! கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..! தர்ணா போராட்டம் நடத்திய பெண்..! "அந்த மனசு தான் சார் கடவுள்"..! சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்..! வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை..! கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்..!

சென்னை: பிரபல தனியார் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..காலவரையரையின்றி மூட உத்தரவு

சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையின் செயல்பாட்டினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை வாசிகளுக்கு

வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ஒன்றாகும். இதனிடையே மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சரத்ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் சிகிச்சைபலனின்றிஉயிரிழந்தார். இதேபோல் அதே மருத்துவமனையில் பணியாற்றிய 52 வயதான ஊழியர் ஒருவரும் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். ஆனாலும் மருத்துவமனை நிர்வாகம் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், ஊழியர்கள் என 118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

vijaya hospital 1200

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஏராளமான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவசரகால சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை, அனைத்து சிகிச்சைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அங்கு சிசிச்சை பெற்று வந்த நோயாளிகள், விஜயா ஹெல்த் சென்டருக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினியால் சுத்தகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டத்தின்படி, மறு உத்தரவு வரும்வரை மருத்துவமனையின் செயல்பாட்டினை நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது

1newsnationuser4

Next Post

கொரொனாவின் தாக்கம்..வருமானமின்றி ஆட்டோ ஓட்டும் நடிகை

Sun Jul 5 , 2020
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரள நடிகை ஒருவர் வருமானத்திற்காக ஆட்டோ ஓட்டி வருகிறார். கொடிய கொரோனா வைரஸ் பலருடைய வாழ்க்கையை திருப்பி போட்டிருக்கிறது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். கல்லூரி முதல்வர்கள் இட்லி விற்பதையும், மருத்துவ கல்லூரி மாணவர்கள் நுங்கு விற்பதையும் கூட நம்மால் காண முடிந்தது. இதனிடையே, மற்றொரு புறம் நடிகைகள் மறும் கிரிக்கெட் […]
kpac manju

You May Like