சட்லஜ் ஆற்றில் கிடைத்த மனித மூளையின் திசுக்கள்!… வெற்றி துரைசாமியுடையதா?… DNA பரிசோதனையில் தொடரும் தாமதம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் சிக்கி பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். அதே சமயம் இந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 6 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை மத்திய பிரதேச போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் 7 வது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த வகையில் சட்லெஜ் நதியில் வெற்றி துரைசாமி காணாமல் போன விவகாரத்தில், விபத்து எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக அவரைப் போல எடை மற்றும் உயரம் கொண்ட மாதிரி (DEMO) பொம்மையை ஆற்றில் வீசி, விபத்து நடந்தபின் வெற்றி துரைசாமி எவ்வழியாக நதியில் சென்றிருப்பார் என மீட்புக் குழுவினர் சோதனை நிகழ்த்தி அவரைக் கணடறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தான் பாறை இடுக்கில் மூளையின் திசு கிடைத்தது. அது வெற்றி துரைசாமி உடையதா என்பதை கண்டறிவதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெற்றி துரைசாமி அவரது மனைவி அல்லது வெற்றி துரைசாமியின் மகனுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். இதுதொடர்பான விபரங்களை இமாச்சல் பிரதேச மாநில போலீசார் சென்னை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

தற்போது சைதை துரைசாமி இமாச்சல் பிரதேசத்தில் உள்ளார். இந்நிலையில் தான் வெற்றி துரைசாமியின் சென்னை குடும்பத்தினரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இவர்கள் நேற்று மாலை 5 மணிக்கு பிறகு மருத்துவமனை சென்றனர். டிஎன்ஏ பரிசோதனை என்பது மாலை 5 மணிக்கு பிறகு செய்வது இல்லை எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது.

இதனால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலையில் மருத்துவமனையில் வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு டிஎன்ஏ பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பரிசோதனையின் முடிவு என்பது இன்று மாலையில் தெரியவரும். இதையடுத்து இமாச்சல பிரதேசத்தில் கிடைத்த மூளை திசுவின் டிஎன்ஏவும், வெற்றி துரைசாமியின் குடும்பத்தினரின் டிஎன்ஏவும் ஒப்பீட்டு செய்யப்படவுள்ளது

1newsnationuser3

Next Post

பிரபலங்கள் குடிக்கும் இந்த பிளாக் வாட்டரின் ரகசியம் என்ன தெரியுமா.!?

Sun Feb 11 , 2024
பொதுவாக பிரபலங்கள் பலரும் தண்ணீருக்கு பதிலாக ஒரு வகையான கருப்பு நிற பானத்தை குடித்து வருகின்றனர். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட்கோலி இந்த கருப்பு நிற தண்ணீரை குடிப்பதை பலரும் பார்த்திருப்போம். பல பிரபலங்களுக்கு வயது 40 தாண்டினாலும் இளமையாக இருப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த கருப்பு நிற தண்ணீர் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்த இந்த கருப்பு நிற தண்ணீரை […]
பிரபலங்கள் அதிகம் குடிக்கும் கருப்பு தண்ணீர்..!! அப்படி என்னதான் இருக்கிறது? ஏன் இதை குடிக்கிறார்கள்?

You May Like