நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

கோவாக்ஸின் தடுப்பு மருந்து இன்று மனிதர்களுக்கு பரிசோதனை.. எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஹரியானா அமைச்சர் தகவல்..

இன்று மனிதர்களுக்கு செலுத்தப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து, எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஹரியானா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோவாக்ஸின்

ஒருபுறம் உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வந்தாலும், மற்றொரு புறம், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இந்தியாவில் முதல்முறையாக கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியது. ‘கோவாக்சின்’ என்று பெயரிடப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து கோவக்சின் மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் முயற்சி கடந்த 10 நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக சுமார் 100 பேர் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஹரியானா மாநிலம் ரோதக்கில் இன்று அவர்களுக்கு கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

இது குறித்து ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ரோஹ்தக்கில் உள்ள பிஐஜி மையத்தில் கோவாக்சின் மருந்து இன்று மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. இதற்காக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று பேருக்கும் கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை அவர்களது உடல் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மருந்து இதுவரை எந்த விதமான எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

#BreakingNews : தமிழகத்தில் இன்று புதிய உச்சத்தை எட்டிய கொரோனா பலி எண்ணிக்கை..

Fri Jul 17 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,60,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 47,539 பேருக்கு […]
tamilnadu corona

You May Like