கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

மக்களிடம் மனிதாபிமானத்தை மேலோங்கி வளர செய்திருக்கும் கொரோனா !!!

corona 1

எங்க காலத்துல எல்லாம் நாங்க வாழ்ந்த வாழ்க்கை முறையே வேற.. ஆனால் நீங்க என்ன தான், இப்ப  வாழ்றீங்கன்னு தெரியல? …என்கின்ற வார்த்தையை நிச்சயம் எல்லார் வீட்டிலையும்  தாத்தா பாட்டி தொடங்கி நம் பெற்றோர்கள் சொல்றத கேட்டு இருப்போம். அந்த வார்த்தைகளின் வரிகளை தற்போது  முழுவதுமாக  உணர வைத்தது இந்த கொரோனாவின் பாதிப்பு தான்.


உலகம் எங்கும் கொரோனாவின் தாக்கம்  மக்களின் உயிர்களை காவுவாங்கி கொண்டிருக்கிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவந்தாலும்,  மக்களும் தங்களின் வாழ்க்கை முறையினையும், பழக்க வழக்கத்தினையும் மாற்றி ,கொரோனாவினை தடுக்க முயற்சி செஞ்சிட்டு வரத,  நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. பல மேலும் இந்த விஞ்ஞான உலகத்துல எது எல்லாம்  சாத்தியம் இல்லேன்னு நினைச்சமோ அத எல்லாத்தையும் நமக்கு  நடத்தி கொடுத்துகிட்டு இருக்கிறது உயிர்க்கொல்லியான கொரோனா.

அப்படி என்ன தான் நிர்வாகத்திலும், மக்களின் வாழ்க்கையும் மாற்றியது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்…

cm amma 5

தேர்தல் சமயத்த தவிர மற்ற எந்த நேரத்திலும் மக்களின் நலன்களை பற்றி கண்டுகொள்ளாத அரசாங்கம்…  இப்ப மக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்திட்டுவராங்க. குறிப்பாக சொல்லனும் னா முதலமைச்சர் தொடங்கி, சுகாதாரத்துறை, போக்குவரத்து , கூட்டுறவு , வருவாய் என அனைத்து துறை அமைச்சர்களும் அவர்களுக்கு என்ன பணி என்பதை புரிந்து செய்திட்டு வருவது அரசியலில் ஏற்பட்டு பெரும்  மாற்றமும் னு சொல்லலாம்.

china corona 1

கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தீவிர சிகிச்சை, தொடர் கண்காணிப்பு மேற்கொண்டுவருகிற நேரத்தில, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி தொடர் அறிவிப்பு வெளியிட்டுவருகிறது அரசாங்கம்.  முழுசா மக்களுக்காக  பணியாற்றும் மனநிலையை ஒரளவிற்கு கொண்டுவந்திருக்கிறது இந்த கொரோனாவின் பாதிப்பு. இதற்கு ஒரு படி மேல் போய், சுதந்திரமாக செயல்பட்டுவந்த தனியார் மருத்துவமனைகளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது அரசு நிர்வாகம். ஆனால் இந்த மாற்றங்கள் எல்லாம் நிச்சயம் தொடருமா என்பது கேள்விக்குறி தான்.?

நிர்வாகத்தை அடுத்து சமூகம் சார்ந்த விஷயங்களை பார்க்கும் போது பல மாற்றங்கள் அரங்கேறியுள்ளது..குறிப்பாக அவசரமாக பணிக்கு செல்லும் போது,  சாலையில் விபத்து நடந்தால் கூட கண்டுகொள்ளாமல் சென்ற காலங்கள் மறந்து, எந்த பகுதியில் யார் உணவு இல்லாமல் இருக்கிறார்? யாருக்கு எந்த உதவி தேவை என்பதை தேடி சென்று மேற்கொள்ளும் மனிதாபிமானமும் தற்போது உயர்ந்து நிற்கிறது. மேலும் எப்போதும் குப்பை மேடுகளாய் நாம் கடந்து செல்லும் பாதைகள் எல்லாம் மாறி தூய்மையாக காட்சியளிக்கிறது. தூய்மைப்பணியாளர்களை ஏளனமாக பார்த்த காலங்கள் மறந்து அவர்கள் அனைவரும் கண்முன்னே கடவுளாக தெரிகின்றனர்.

sanitary worker1

இந்த சூழலில் குடும்ப சூழல் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஆம் ஊரடங்கினால், வேலை, வேலை என சுற்றித்திரிந்த நாட்கள் கடந்து  அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. வேறு வழியின்றி குடும்பத்தோடும், குழந்தைகளோடும் அழகான  நாட்களை கழிப்பதற்கு வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கின்றன. பழங்காலத்தில் திண்ணையில் அமர்ந்து குழந்தைகளுக்கு கதைகளை கூறி, சிறு விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்து  விளையாடிய காலங்கள் எல்லாம் கண்முன்னே வந்து நிற்கிறது. 

child game 2 Copy

மேலும் ஏழாம் அறிவு படத்துல  மஞ்சள், வேப்பிலையின்  குணங்கள் பற்றி சூர்யா பேசும் போது ஆவேசத்தோடு இனி அப்படி தான்  செய்யனும் னு எல்லாரும் நினைப்போம். ஆனால் வேலையில அப்படியே அத மறந்திருப்போம். தற்போது வேறு வழியில்லாமல்  நம்மள காப்பாற்றிக்கொள்ள செய்ய ஆரம்பிச்சிட்டோம். யார் வீட்டுக்குள் வரவேண்டும் என்றாலும் திண்ணையில் வைத்திருக்கும் மஞ்சள் தண்ணீரால் கால்களை கழுவிட்டு தான் உள்ளே வர வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர். பழங்கால நடைமுறைகளையும் , மறந்ததை மீட்டெடுக்க கொரோனாவின் பாதிப்பு ஒரு உதவியாக இருந்துவருகிறது.

curfew 1

தற்போது விமானங்கள் பறக்கவில்லை,. பேருந்துகள் இயங்கவில்லை, ரயில்கள் ஓடவில்லை நிசப்தமான அமைதி. விவசாயம் மேலோங்கிநிற்கிறது. அவரவர் அவர் பணியினை செம்மையாக மேற்கொள்கிறார்கள். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிராத்தனை. எப்படியாவது மருந்தினை கண்டுபிடித்துவிடுவார்கள்  என்ற எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் அதிகளவில் உள்ளது.

கொரோனா ஒருபுறம் கொடிய நோயாக சொல்லப்பட்டாலும், இதன் மூலம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மக்களை ஒரு மனிதாபிமானமுள்ள மனிதனாகவே மாற்றியுள்ளது.

1newsnationuser3

Next Post

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது..!

Sun Apr 5 , 2020
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் கடந்தாண்டு கண்டறியப்பட்ட கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இதற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால் அனைத்து நாடுகளும் செய்வதறியாது தவித்து வருகின்றன. இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. […]
corona virus

You May Like