தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..?அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது? 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு "அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…

மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்த வாலிபர்; வீட்டில் தனியாக இருந்த நிலையில் வீடு புகுந்து வெட்டிய கணவர்

இருவரும் சேர்ந்திருந்த

திருவள்ளூர்: கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து சென்ற தன்னுடைய மனைவியுடன் கள்ளத்தனமாக வாழ்ந்து வந்த வாலிபரை, நண்பர்கள் உதவியுடன் அப்பெண்ணின் கணவர் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள கேசவபுரத்தில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற வாலிபர் சபரிதா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வந்துள்ளார். முன்னதாக சபரிதாவுக்கும், அவருடைய கணவர் பசுபதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தான் கணேஷ்குமாருடன் கணேஷ்குமாருடன் தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் சபரிதா. இதனால் பசுபதிக்கும், கணேஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இருவரும் சேர்ந்திருந்த

இந்தநிலையில், கொரோனா ஊரடங்கை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பசுபதி, எப்படியாவது கணேஷ்குமாரினை கொலை செய்துவிடவேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக கணேஷ்குமார் – சபரிதா வீட்டில் தனியாக இருந்த சமயம், தன்னுடைய நண்பர்களின் உதவியோடு , பட்டப் பகலில் சபரிதா கண்முன்னே கணேஷ்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த கணேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கொலையினை நேரில் பார்த்த சபரிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை கண்டவர்கள் தப்பித்து சென்றுவிட்டனர்.

இருவரும் சேர்ந்திருந்த

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் போலீசார், இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் சபரிதாவை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு கொலை செய்த பசுபதி மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்..

1newsnationuser2

Next Post

பொருளாதாரத்தை மீட்க இந்தியா சரியான பாதையில் செல்கிறது - பிரதமர் மோடி

Tue Jun 16 , 2020
பொருளாதாரத்தை மீட்க இந்தியா சரியான பாதையில் செல்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, இன்று 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார். பஞ்சாப், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய […]
இந்தியா சரியான

You May Like