ஐதராபாத்தில் குழந்தை இல்லாததால் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

ஐதாரப்பாத் சம்ஷாபாத் நகரை சேர்ந்த தம்பதி லாவண்யா வெங்கடேஸ்வரன். திருமணமாகி சில வருடங்கள் கடந்த நிலையில் இருவருக்கும் குழந்தையின்மை பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் லாவண்யா தற்கொலை செய்துக்கொண்டார்.

லாவண்யாவின் தற்கொலையை போலீசார் விசாரித்து வரும் நிலையில் அவரது உறவினர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் லாவண்யாவை கணவர் வெங்கடேஸ்வரன் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரனத்தால் லாவண்யாவை கணவன் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் அவர்களது நாய் அந்த பெண்ணை காப்பாற்ற இடையில் சென்று சண்டையை தடுக்கிறது. இது காண்போரை கண்கலங்க செய்கிறது.

குழந்தையின்மை என்பது ஒருவரும் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் பெண்கள் மற்றும் குற்றவாளியாக்கப்பட்டு தாக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எத்தனையோ ஆதரவற்றோர், குழந்தைகள் காப்பகம் என இருப்பது இவர்களுக்கு ஒரு தீர்வாக தெரியவில்லை. இது கொடூரமான தாக்குதல் என ஐந்தறிவு ஜீவனுக்கு தெரிந்தது அந்த கணவருக்கு தெரியமால் போனது வேதனை அளிகிறது.