COVID-19 க்கான சிகிச்சையாக யு.எஸ். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஊக்குவித்த மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனா வைரஸ்க்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படாது என மருத்துவ பரிசோதனை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களால் பேசப்பட்டு விவாதத்தை கிளப்பிய ஹைட்ராக்ஸி குளோரோகுயின், 6.4 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த மற்றும் உலகளவில் 382,000க்கும் அதிகமானவர்களைக் கொன்ற தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் முக்கியபங்கு வகிக்கும் என எழும்பிய தகவலால் மருத்துவ பரிசோதனை ஆய்வுகள் நடத்தப்பட்டது.

மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயினையும் ப்லாசெபோ மருத்துவ பரிசோதனையும் ஒப்பிட்டு ஒரு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 821 மாதிரிகளை தேர்வு செய்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த புதிய மருத்துவ பரிசோதனையை அமெரிக்கா மற்றும் கனடா மருத்துவர்கள் மேற்கொண்டு வந்தனர். இதற்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயினையும் ப்லாசெபோ மருத்துவ சிகிச்சையையும் சில கொரோனா நோயாளிகளுக்கும் கொரோனா நோயால் பாதிகப்பட்டிருந்தவர்களின் நெருங்கிய வட்டாரங்களுக்கும் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இதில் ப்லாசெபோ சிகிச்சை பெற்றவர்களில் 14.3% பேர் குணமடைந்துள்ளனர். மேலும் அவர்களில் நோய் தோற்றால் ஒருவரும் மரணமடையவில்லை என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினிலும் வெளியிடப்பட்டது.

பல்வேறு மருத்துவ காரணங்களாலும் உலக சுகாதார துறையின் கட்டுப்பாடுகளினாலும் COVID-19க்கு எதிராக நடத்தப்படவிருக்கும் பல சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று முன்னணி ஆராய்ச்சியாளரும் மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மருத்துவருமான டாக்டர் டேவிட் பவுல்வேர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த இரண்டு பேர்களுக்கு நோய்த்தொற்று கண்டறிந்த பின்னர் அதிபர் டிரம்ப் இந்த மாத்திரைகளை ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.