இன்று வரை கடனில் மூழ்கியிருக்கின்றேன்… நடிகர் ஜெய் வேதனை!!

இன்று வரை படவாய்ப்புகள் அமையவில்லை என குறிப்பிட்ட ஜெய் இன்றும் கடனில்தான் இருக்கின்றேன் என வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார்.

தேனிசை தென்றல் என அழைக்கப்படும் தேவாவின் உறவினர்தான் ஜெய். திரையுலகில் இசையமைப்பாளராகவேண்டும் என எதிர்பார்த்த ஜெய்க்கு நடிகராக வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடித்த பகவதி என்ற திரைப்படம்தான் இவருக்கு முதல் படம். விஜயின் தம்பியாக நடித்த அவர் நீண்ட இடைவெளிக்குபின்னர் 600028 என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என நடிப்பில் கலக்கினார். இதையடுத்து முன்னணியில் இருந்தார் ஜெய். திருமணம் என்னும் நிக்காஹ் படத்திற்கு பின்னர் அந்த அளவிற்கு பெயர் கொடுக்கும் திரைப்படங்கள் அமையவில்லை எனறாலும் பின்னர் சுந்தர்.சியின் பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்த வாய்ப்பாக காபி வித் காதல் திரைப்படத்தில் நடித்து அந்த படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். மற்றவர்கள் நினைப்பது போல் இல்லை. என் குடும்பம் இன்னும் கடனில்தான் இருக்கின்றது என வேதனையுடன் தெரிவித்துள்ளார். எனினும் அவர் அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற்று மென்மேலும் உயர வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

Next Post

நடிகர் விஜய் கையில் உள்ள குழந்தை யார் தெரியுமா?

Tue Nov 1 , 2022
வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் அவரது கையில் ஒரு குழந்தையை வைத்தவாறு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. யார் அந்த குழந்தை என சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்படப்பிடிப்பு நடந்து வருகின்றது. வாரிசு திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் […]

You May Like