’’அப்பு இறந்து 3 நாட்கள் கழித்தே விஷயம் தெரிந்தது, விஷயத்தை கேட்டு அதிர்ச்சியானேன்’… நடிகர் ரஜினிகாந்த் பேச்சு…!!

கர்நாடக திரையுலக பவர்ஸ்டார் என்றழைக்கப்படும் புனித் ராஜ்குமார் இறந்து 3 நாட்களுக்கு பின்னரே தனக்கு விஷயம் தெரிந்ததாகவும் பின்னர் கடும் அதிர்ச்சியடைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தோன்றி 67வது ஆண்டில்அடி எடுத்து வைக்கின்றது. இந்த விழாவை கொண்டாடும் விதமாக அரசு சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்நாடக தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ’கர்நாடக ரத்ன’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று விருது வழங்கினார்.

சமூக சேவையில் கலைத்துறையில் தனி முத்திரை பதித்ததற்காக மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, இன்போசிஸ் சுதாமூர்த்தி ,அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ’’கர்நாடகாவில் உள்ள 7 கோடி மக்களுக்கும் எனது ராஜ்யேர்சவா வாழ்த்துக்கள். அப்பு ஒரு தெய்வக்குழந்தை. நானும் புனித்தும் 1979ல் சென்னையில் சந்தித்தேன். வருடம் வருடம் சபரிமலைக்கு செல்வார்கள். ராஜ்குமார் சாரும் வந்திருந்தார். இருமுடி கட்டி சரணம்பாடி செல்வார். 1979ம் ஆண்டு அவர் மிகவும் சிறு வயதான புனித் சாமியே சரணமய்யப்பா என்று ஒரு குரல் கேட்டது. யார் என்று பார்த்தபோது ராஜ்குமார் சார் மடியில் சிறுவன் அமர்ந்திருந்தார். அவர்தா4 வயது சிறுவன் அப்பு என்ற புனித். பார்த்த அனைவருக்குமே நெகிழ்ச்சியானது. அனைவருக்குமே அவர் இஷ்மான குழந்தை ஆனார், 48 கிலோ மீட்டருக்கு அவர் நடந்து தரிசனம் செய்வார்கள். பின்னர் அப்பு படம் வெளிவந்தது அவர் நடனம் நடிப்பு என அனைத்திலும் திறமையாக இருந்தார்.’’

அவரது திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்தேன். 100 நாள் ஓடியஅப்பு படத்திற்கு நான் விருது கொடுத்தேன். அப்பு இன்று இல்லை என நினைக்கும் போது ஜீரணிக்க முடியவில்லை. அவர் இறந்து 3 நாட்களுக்கு பின்னரே எனக்கு அவர் இறந்துவிட்டார் என தெரியவந்தது. நான் மருத்துவமனையில் இருந்த காரணத்தால் என்னிடம் யாரும் சொல்லவில்லை. 3 நாட்களுக்கு பின்னர் தெரிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். கோடி கோடியாக அவர் தானம் செய்வார் அவ்வளவு பெரிய மனம் அவருக்கு. இந்த சிறிய வயதில் அவர் இறந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனங்களின் மனதை புரிந்துகொள்வார். எம்.ஜி.ஆரைப் போல இருந்தவர் புனித் ராஜ்குமார். அனைவருக்கும் அள்ளி அள்ளி கொடுக்கும் மனம் படைத்தவர். அவர் இவ்வளவு உதவி செய்வார் என்பதை யாருமே அறிந்திருக்க மாட்டார்கள். அப்பு 21 வருடத்தில் 35 படங்கள் நடித்து சாதனை படைத்துள்ளார்’’. என தெரிவித்தார்.

Next Post

பா.ஜ.க.மாநிலத்தலைவர் அண்ணாமலை கைது.. பதற்றம்!!

Tue Nov 1 , 2022
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சென்னையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்பட தொண்டர்கள் கைது செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. சென்னையில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பா.ஜ.க. மகளிர் நிவாகிகள் குஷ்பூ, கௌதமி ஆகியோர் குறித்து திமுக நிர்வாகி சாதிக் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் சாதிக்கை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. […]

You May Like